சிறாரை சிறப்பாக பராமரிக்க பெற்றோர், பாலர்பள்ளிகளுக்கு உதவும் களஞ்சியம் 

சிறார்களை இன்னும் சிறந்த முறையில் பராமரித்து பேணி வளர்த்துவர பெற்றோருக்கும் பரா மரிப்பாளர்களுக்கும் இணைய கவாசல் ஒன்று இப்போது பெரிதும் உதவி வருகிறது. 
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடங்கி இருக்கும் இந்த இணையவாசலில் பெற்றோர் கள், பாலர்பள்ளிகள் போன்றவர் களுக்கு உதவக்கூடிய சிறார் மேம்பாட்டுத் தகவல்களும் பிள்ளை வளர்ப்புத் தகவலும் இடம்பெற்று இருக்கின்றன. 
இந்த இணையவாசல் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவை நேற்றுக் கொண்டாடியது.
அதிக உடன்பிறப்புகளுடன் கூடிய பிள்ளைகளுக்கு அதிக உதவியை இந்த இணையவாசல் செய்கிறது. காணொளிகள், கட்டு ரைகள், வழிகாட்டி நெறிமுறைகள் போன்ற உள்ளூர் மற்றும் ஆய்வு அடிப்படையிலான வளங்கள் இந்த இணையவாசலில் உள்ளன. 
பிறப்பு முதல் ஆறு வயது வரை சிறார்களின் பல்வேறு கட்டங் களுக்கும் ஏற்றாற்போல் வளங்கள் இந்த இணையவாசலில் வகைப் படுத்தப்பட்டு இருக்கின்றன. 
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ‘தி லிட்டில் ஸ்கூல்  ஹவுஸ்’  பிள்ளை களுடன் கலந்து உறவாடுகிறார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்