நியூசிலாந்து பிரதமர்: நாட்டின் கறுப்பு தினம் 

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளி வாசல்களில் நேற்று நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 49 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.
இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தெரிவித்தார். தாக்குதலை அடுத்து, நியூசிலாந்தில் பாது காப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நிமித்தமாக நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சர்ச் நகரெங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றுக் காவலில் ஈடுப்பட்டு வருகின் றனர். 
நேற்றைய தினத்தை நியூசி லாந்து வரலாற்றின் கறுப்பு தினங்களில் ஒன்று என்று பிரதமர் ஆர்டன் வர்ணித்தார்.
தாக்குதல்காரர்கள் பயன் படுத்தியதாகச் சந்தேகிக்கப் படும் வாகனங்களிலிருந்து இரு வெடிபொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவற்றை அதிகாரிகள் செயலிழக்கச் செய்ததாகவும் பிரதமர் ஆர்டன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார்.