தமிழ்மொழி விழா: 46 நிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் தமிழ்மொழியை மேம்படுத்தி அதைக் கட்டிக்காக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டின் தமிழ்மொழி விழா, வளர்தமிழ் இயக்கம் ஏற்பாட்டில், ஒன் றிணைந்த சமூக ஆதரவுடன் மார்ச் 24 முதல் ஏப்ரல் 28 வரை, மொத்தம் 46 நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடக்கிறது. ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசு வோம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய அந்த விழாவை மக்களிடம் பிரபலப் படுத்தும் முயற்சியாக நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூரின் தமிழ் அமைப்புகளும் தொண்டூழியர்களும் பொதுமக்களுக்கும் கடைகளுக்கும் கையேடுகளை விநியோகித்தன. சுவ ரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

இதற்கு லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மர புடமைச் சங்கம் ஆதரவு அளித்தது. மொத்தம் 43 பங்காளி அமைப்புகள் பங்கெடுத்துக்கொள்ளும் தமிழ்மொழி விழாவை தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், மார்ச் 24ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மீடியாகார்ப் அரங்கில் அதிகாரபூர்வமாக தொடங்கி வைப்பார். அந்த நிகழ்ச்சி வசந்தம் ஒளிவழியில் நேரடியாக ஒளிபரப்பாகும். இந்த ஆண்டு விழாவில் இடம்பெறக் கூடிய இலக்கியம், மேடைப்பேச்சு, கலை, கலாசாரம் முதலான பல்வேறு வகை நிகழ்ச்சிகளில் சமூகத்தினர் மிகவும் நாட்டத்துடன் கலந்துகொள்ளும் வகை யில் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொருவரிடத் திலும் ‘தமிழை நேசியுங்கள். தமிழில் பேசுங்கள்’ என்று வலியுறுத்திக் கூறும். தாய்மொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்படி எல்லாரையும் விழா ஊக்குவிக்கும்.

தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக சிங்கப்பூரின் தமிழ் அமைப்புகள், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடமைச் சங்கம் (லிஷா) ஆதரவுடன் நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் விழா நிகழ்ச்சி விவரங்களைக் கொண்ட கையேடுகளை விநியோகித்தன. கடைகளில் சுவரொட்டிகளை ஒட்டினர். அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் அ.கி. வரதராஜன், 74, (நடு) துணைச் செயலளார் ஸ்ரீ.நே. பிரசாத் (இடது) இருவரும் விழா கையேடுகளைப் பலருக்கும் கொடுத்தனர். படம்: திமத்தி டேவிட்