இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

மரத்தூள், காய்ந்த இலைகளால் ஆன தரையுடன் புதிய இயற்கை விளையாட்டுப் பூங்கா நேற்றுத் திறக்கப்பட்டது.
குழந்தைகளை இயற்கையுடன் மேலும் அணுக்கமாக்கும் வகையில் தேசிய பூங்கா கழகம் உருவாக் கியுள்ள ‘ஹோர்ட்பார்க்’ எனும் இந்த விளையாட்டுப் பூங்காவின் திறப்பு விழாவில்  தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன், என்டியுசி  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பாலர்களும் கலந்துகொண்டனர்.
அங்குள்ள மர ஓடை (லாக் வாலி) என்ற சாசகப் பிரிவிலுள்ள மரத் துண்டுகளின் மீது ஏறி விளையாடினர். பாடும் விதைகள் (சிங்ஙிங் சீட்ஸ்) எனும் பிரிவில் தொங்கும் மூங்கில் கம்புகளுடையே நுழைந்து இசை எழுப்பினார்கள். மணல் கிடங்கில் வீடுகள் கட்டி மகிழ்ந்தார்கள்.
தட்டான்பூச்சிகளையும் பட்டாம் பூச்சிகளையும் பார்த்து வியந்தார்கள்.
அதிசய காடு (மேஜிக்கல் வுட்ஸ்), ஓடை, ரகசிய கூடம் (சீக்கிரெட் டென்), சமையலறை, புதையல் பாதை (டிரஷர் டிரெயில்) என வித்தியாசமான விளை யாட்டு இடங்கள் இந்த இயற்கைப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் இங்கு மகிழ்ச்சி யாக விளையாடி மகிழும் அதே நேரத்தில் தேசிய பூங்கா கழகத் தின் ஆய்வுக்கும் உதவுகிறார்கள்.
எதிர்கால விளையாட்டுப் பூங்காங்களை மரங்கள், மணல் என இயற்கையுடன் இணைத்து வடிவமைக்கும் தேசிய பூங்கா கழத்தின் இயற்கைப் பூங்கா திட்டத்தின் சோதனை முயற்சியாக இந்த ‘ஹோர்ட்பார்க்’ அமைக்கப் பட்டுள்ளது.
பாலர் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு இயற்கையுடன் மனிதனுக்குள்ள உணர்வுபூர்வ மான தொடர்பைக் குறிக்கும் இந்த இயற்கை விளையாட்டுப் பூங்காத் திட்டத்தை தேசிய பூங்கா கழகம் உருவாக்கியுள்ளது.
சிறார்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவி, அவர்களின் தன்னம்பிக்கையையும், புத்தாக்க வெளிப்பாட்டை அதிகரிக்கவும் அவர்களை இயற்கையுடன் ஒன்றி ணைக்கும் நோக்கத்தில் அவர் களை  அதிக நேரத்தை வெளிப் புறத்தில் செலவிடத் தூண்டும் வகையில் இத்தகைய பூங்காங் களை உருவாக்க கழகம்  திட்ட மிடுகிறது.