கிறைஸ்ட்சர்ச் கொடூரம்: நல்லடக்கப் பணிகள் துவக்கம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்ப வத்தில் மாண்டோரை நல்லடக் கம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. 
உயிரிழந்த ஐம்பது பேரில் இன்னும் சிலரை அடையாளம் காணும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். அதனால், மாண்டோரை அடக்கம் செய்வது தாமதம் அடைந்து வந்ததாகக் கூறப்பட் டது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான காலித் முஸ்தஃபா, 44, என்பவரும் ஹம்ஸா, 16, என்னும் அவரது மகனும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டனர். 
சிரியாவைச் சேர்ந்த இவர் களது குடும்பம் கடந்த ஆண்டு அடைக்கலம் நாடி நியூசிலாந்து வந்தது என்ற தகவல் வெளி யாகி உள்ளது.  
பள்ளிவாசல்களில் கண் மூடித்தனமாக நடத்தப்பட்ட துப் பாக்கிச்சூட்டில் காலித் முஸ் தஃபாவின் இன்னொரு மக னான ஸாயித், 13, என்பவர் காயத்துடன் உயிர்தப்பிவிட்டார். 
தமது தந்தையும் அண்ண னும் நல்லடக்கம் செய்யப்படும் நிகழ்வுக்கு சக்கர நாற்காலியில் ஸாயித் வந்து கலந்துகொண் டார்.