மரி ஆற்றில் ராட்சத மீன் கண்டுபிடிப்பு

மரி ஆற்றின் கரையில் மிகப் பெரிய மீன் ஒன்று காணப்பட்டது. இந்த மீன் ‘மோலா மோலா’ இனத்தைச் சேர்ந்தது என்று கடல்துறை நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

அரிய வகை கடல் உயிரினமாகக் கருதப்படும் இந்த மீனின் நீளம் சுமார் 1.8 மீட்டர்.

இந்த ராட்சத மீனுடன் மீனவர்கள் இருவர் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.