கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி

கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்காக, நியூசிலாந்தின் தேசிய ஒலிபரப்பு ஊடகங்கள் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியுள்ளன. மௌன அஞ்சலிக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான தொழுகை அழைப்பு வாசகங்களும் வெள்ளிக்கிழமை காலை ஒலிபரப்பப்பட்டன.  

தாக்குதலுக்கு இலக்கான அல்-நூர் பள்ளிவாசலுக்கு அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோருடன் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் சேர்ந்து தமது துயரத்தை வெளிப்படுத்தினார். “நாம் அனைவரும் ஒன்றே, உங்களுடன் நியூசிலாந்து துக்கம் அனுசரிக்கிறது,” என்று திருவாட்டி ஆர்டன் கூறினார்.

வெள்ளை இனவாதியான ஆஸ்திரேலியர் பிரெண்டன் டாரன்ட் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.