பச்சை முத்திரை: தண்ணீரை சேமிக்க தேசிய முயற்சி

சிங்கப்பூரில் தண்ணீரைச் சேமிக்க ஹோட் டல்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கு உதவும் தேசிய முயற்சியாக பச்சை முத் திரையுடனான சாதனங்கள் அறிமுகம் காண உள்ளன. பாத்திரம் கழுவுவதற்கான சாதனங்களை விற்கும் வர்த்தக நிறு வனங்கள் இவ்வகை முத்திரையுடன் சான் றளிக்கப்பட்டவையாக அடுத்த மாதமோ மே மாதமோ பெற முடியும்.
பச்சை முத்திரை பெற பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிக்கும் ஆற்ற லுடன் கழிவு நிர்வாகமும் கழிவுப் பொருட் களின் மறுசுழற்சியும் அத்தகுதிகளுள் குறிப்பிடத்தக்கன.
சிங்கப்பூரின் தண்ணீர் தேவை 2060ஆம் ஆண்டுவாக்கில் இரட்டிப்பாக மாறும் நிலை உள்ளதால் அன்றாட தண்ணீர்ப் பயன் பாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு நபருக்கு 130 லிட்டருக்குக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றிரவு ‘GoBlue4SG’ என்னும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தி ருந்தது. சிங்கப்பூரில் முதன்முறையாக நடத் தப்பட்ட இந்நிகழ்வை ஆதரிக்க கிட்டத்தட்ட 5,000 பேர் திரண் டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி