பிரதமர் லீ: சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் தாக்குப்பிடிப்பதாக இருக்க வேண்டும்

சுகாதாரப் பராமரிப்புச் செலவு களுக்கான நிதிக்கு சிங்கப்பூர் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்புச் செலவு ஏற்கெனவே $9 பில்லி யனைத் தாண்டிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டி லும் வேகமாக அதிகரித்து வரும் அச்செலவு, வரும் ஆண்டுகளில் இன்னும் உயரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. முடிவில், அச் செலவு தாக்குப்பிடிக்க முடியாத படி போகலாம் என்று திரு லீ கூறினார்.
சிங்கப்பூரின் பெரிய புதிய மருத்துவமனையான செங்காங் பொது மருத்துவமனையையும் செங்காங் சமூக மருத்துவமனை யையும் பிரதமர் நேற்று அதிகார பூர்வமாக திறந்துவைத்தார்.
“சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கான நிதிக்கு புதிய வழிகளை ஆராய வேண்டும். அதே நேரத்தில், எதில் நாம் செலவழிக்க வேண்டும், எந்த மருந்துகள், செயல்முறைகள் செலவு குறைந்தவை போன்றவை குறித்து நாம் சிந்திக்க வேண் டும். ஆகையால், கடினமான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியுள்ளது.  அந்த முடிவு களுக்கு சிங்கப்பூரர்கள் ஆதரவு அளிப்பர் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
உட்லண்ட்சில் 2022ல் அடுத்த பொது மருத்துவமனை திறக்கப்படும். அதன்பின் எதிர் காலத்திற்கான சுகாதாரப் பரா மரிப்புத் தேவைகள் குறித்து திட்டமிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.
பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் சுகாதாரப் பராமரிப் பிற்காக சிங்கப்பூர் குறைவாகச் செலவிட்டு வருகிறது என்றார் பிரதமர் லீ. அதற்குக் காரணம் அந்த நாடுகளைக் காட்டிலும் இளம் தலைமுறையை சிங்கப்பூர் கொண்டிருந்ததுதான் என்றும் அண்மைக்காலமாகத்தான் நமது மக்கள்தொகை மூப்படையத் தொடங்கியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
“ஆயினும், நமது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை முறையாகக் கட்டமைத்திருப்பதே அதற்கு முக்கியக் காரணம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது எளிதான காரியமல்ல என்ற அவர், சில சிகிச்சைகளை மேற்கொள்ள நோயாளிகள் விரும் பினாலும் அது தேவையில்லை அல்லது செலவு அதிகமாகும் என்று அவர்களிடம் சொல்வது கடினம் என்றும் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி