சுடச் சுடச் செய்திகள்

ஸ்காட்ஸ் ரோட்டில் கிராண்ட் ஹயட் ஹோட்டலில் தீச்சம்பவம்

கிராண்ட் ஹயட் ஹோட்டலிலுள்ள உணவகம் ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஹோட்டலில் இருந்து புகை வெளிவருவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மூன்று வாகனங்களும் போலிஸ் கார் ஒன்றும் சம்பவ இடத்தில் காணப்பட்டிருந்தன.

10 ஸ்காட்ஸ் ரோட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல் காலை 11.20க்கு கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

இதில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை. சம்பவத்திற்கான காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon