சுடச் சுடச் செய்திகள்

இணையச் செய்தித் தளங்களுக்கு கட்டுப்பாடு

நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய சட்டத்தின்படி, இணைய செய்தித் தளங்கள் பொய்ச் செய்திகள் குறித்து எச்சரிக்கை வெளியிட அல்லது அவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சில கடுமையான சம்பவங்களில் அவற்றை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இணையப் பொய்த் தகவல்கள், கையாளுதல் பாதுகாப்பு சட்ட மசோதா நாளை மறுநாள் திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்படவுள்ளது. பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க அந்தச் சட்டம் வகைசெய்யும்.
வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட இணையச் செய்தி ஊடகங்களையும் தளங்களையும் அதற்குப் பொறுப்பாக்கும் உரி மையை புதிய சட்டம் அரசாங் கத்திற்கு வழங்கும் என்று பிரதமர் லீ கூறினார்.
“இணையப் பொய்ச் செய்திகள் தொடர்பில் திருத்தங்கள் செய்யப் பட்டதை அந்தச் செய்தித் தளங் கள் காட்டவேண்டும் அல்லது அவை தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம், வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அந்த விவகாரம் தொடர்பான எல்லாக் கருத்து களையும் அறிந்துகொண்டு, எது உண்மை என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்,” என்று திரு லீ சொன்னார்.
“புதிய சட்டத்தின்கீழ், சில தீவிரமான, அவசர சம்பவங்களில், சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படு வதற்கு முன்பாகவே பொய்ச் செய் திகளை இணையச் செய்தித் தளங்கள் அகற்ற வேண்டியிருக் கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு நடைபெற்ற ‘சேனல் நியூஸ் ஏ‌ஷியா’வின் இருபதாம் ஆண்டுநிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பொய்ச் செய் திகள் பரவாமல் தடுக்க சட்டம் மட்டும் போதாது, அதற்குக் குடி மக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரதமர் லீ சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon