மெல்பர்னின் பிரபல கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் 2வது ஆகப்பெரிய நகரமான மெல்பர்னில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற் றொருவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
பிரஹரன் புறநகரில் உள்ள புகழ்பெற்ற ‘லவ் மெ‌ஷின்’ எனும் இரவு கேளிக்கை விடுதிக்கு முன்பு நேற்று அதிகாலை துப் பாக்கிச் சூடு நடைபெற்றது.
மூன்று பாதுகாப்பு அதி காரிகள், கேளிக்கை விடுதிக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் ஆகிய நால்வரும் துப்பாக்கியால் சுடப் பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்து நால்வர் மீதும் துப் பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகத் தெரிகிறது,” என்று விக்டோரியா காவல்துறை ஆய்வாளர் ஆண்ட்ரு ஸ்டாம்பர் செய்தியாளர் களிடம் கூறினார்.
“இது ஒரு பயங்கரமான செயல். மெல்பர்ன் நகரில் உள்ள முக்கிய பொழுதுபோக்குத் தள மான பிரதான கேளிக்கை விடு தியில் இந்தச் சம்பவம் நடந்துள் ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட 37 வயது பாதுகாப்பு அதிகாரி உடன டியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைக்க வில்லை.
இதில் காயம் அடைந்த 28 வயது நபரின் உடல்நிலை மோச மாக உள்ளது. இதர இரண்டு பேர், வயது 29, வயது 50 சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத் திடம் பேசிய காவல்துறை அதி காரி ஒரு வர், பயங்கரவாதத்துடன் இதற்கு தொடர்பிருக்காது என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.