ஜூரோங் ஈஸ்ட்: அடுக்குமாடி வீட்டில் தீ

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று தீ மூண்டதை அடுத்து சம்பவம் நடந்த புளோக்கிலிருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். 

உதவிக்கான அழைப்பு பிற்பகல் மூன்று மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். ஆறாம் மாடியில் உள்ள அந்த வீட்டின் வரவேற்பு அறையில் தீ மூண்டதாக அவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை.

சம்பவத்திற்கான காரணத்தைக் குடிமைத் தற்காப்புப் படையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.