தெம்பனீஸ் வீவக புளோக்கில் தீச்சம்பவம்

தெம்பனீஸ் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீச்சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெம்பனீஸ் ஸ்திரீட் 45லுள்ள புளோக் 492‘இ’யில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல் காலை 9.15 மணிக்குக் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. புளோக்கின் ஒன்பதாம் மாடிக்கும் 12ஆம் மாடிக்கும் இடையே வசிக்கும் கிட்டத்தட்ட 20 குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.

அளவுக்கு அதிகமான புகையைச் சுவாசித்த இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.