இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குறைந்தது 189 பலி

  • மூன்று தேவாலயங்கள், நான்கு தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் குண்டு வெடிப்பு
  • 12 மணி நேர ஊரடங்கு, சமூக ஊடகங்கள் முடக்கம்
  • குண்டு வெடிப்புகளுக்கு முன்பாகவே தாக்குதல் குறித்து காவல் துறை தலைவர் எச்சரிக்கை

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மேலும் இரண்டு பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன.

இலங்கையின் தேவாலயங்கள், நட்சத்திர தங்கும் விடுதிகள் உட்பட இதுவரை மொத்தம் 8 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஏப்ரல் 21) தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதில் குறைந்தது 189 பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான சமூக ஊடகத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

புதிய இரண்டு குண்டுவெடிப்புகளில் ஒன்று கொழும்புவின் தெற்குப் பகுதியான டெஹிவாலாவில் உள்ள தங்கும் விடுதியில் நடைபெற்றது. அதில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர். மற்றொன்று குண்டு கொழும்புவின் வடக்குப் பகுதியான ஒருகோடவட்டாவில் நடைபெற்றது.

இதற்கிடையே இலங்கையின் முக்கிய தேவாலயங்களில் தாக்குதல்கள் நடைபெறும் என்று 10 நாட்களுக்கு முன்பாகவே இலங்ககையின் காவல் துறைத் தலைவர் புஜுத் ஜெயசுந்தரா எச்சரித்துள்ளதாக அறியப்படுகிறது.

'என்டிஜே' (நே‌‌ஷனல் தவ்ஹீத் ஜம்மாத்) எனும் இலங்கையைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்தும் என வெளிநாட்டு உளவுத் துறை கூறியுள்ளதாக அந்த எச்சரிக்கை தெரிவித்தது.

முன்னதாக காலையில் ஆறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகின. இந்நிலையில் இலங்கையிலுள்ள பல தேவாலயங்களைச் சுற்றி ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

(காணொளி: செயிண்ட் செபெஸ்டியன் தேவாயலயம்/யூ டியூப்)

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

காலையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மூன்று தேவாலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வெடிகுண்டுகள் வெடித்தன.

கொழும்பு செயிண்ட் அந்தணோயிர் தேவாலயத்திலும் நீர்கொழும்பு (நிகாம்போ) நகரில் உள்ள செயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்திலும் இன்று காலை வெடிகுண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தலைநகர் கொழும்புவில் உள்ள மூன்று, நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் மட்டக்களப்புவில் (பட்டிக்கோலா) உள்ள தேவாலயம் ஒன்றிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்புகளில் காயமுற்றதற்காக கொழும்பு பொது மருத்துவமனையில் குறைந்தது 160 பேரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் குறைந்தது 300 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கொழும்புவில் உள்ள ‌‌ஷங்ரிலா, கிங்க்ஸ்பரி, சின்னமன் கிராண்ட் நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகே உள்ள சின்னமன் கிராண்ட் தங்கும் விடுதியில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்தது என்றும் அதில் குறைந்தது ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என்றும் இலங்கைக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காவல் துறை சிறப்பு அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் இலங்கைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!