இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு;  207 பேர் உயிரிழப்பு, எழுவர் கைது 

இலங்கையில் தேவாலயங்களிலும் ஹோட்டல் களிலும் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த எட்டுக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 207 பேர் உயிரிழந்தனர்; 450க்கும் அதிகமா னோர் காயமடைந்தனர்.


இவை தற்கொலைத் தாக்குதல்கள் என்றும் ஒரே அமைப்பினால்தான் நடத்தப்பட்டுள்ளது என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறினார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என்று நம்பப்படுபவர் முகம்மது அஸாம் முகம்மது என்ற பெயரில் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஒன்றான கொழும்பிலுள்ள சினமன் ஹோட்டலில் பதிவு செய்தார்.


நேற்றுக் காலை அந்த ஹோட்டலின் உணவகத்தில் காலை உணவுக்கு அந்த நபர் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது தமது முதுகில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என்று அந்த ஹோட்டல் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்திக் கூறியது. "ஒரே களேபரமாக இருந்தது. காயம் அடைந்தவர்களைத் தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். 20 பேர் கடுமையான காயம் அடைந்தனர்," என்று சினமன் ஹோட்டலின் நிர்வாகி கூறினார்.


இந்த ஹோட்டல் இலங்கைப் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்துக்கு அருகில் இருப்பதால் சிறப்புக் கமாண்டோ படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்றுக் காலையில் தேவாலயங்களில் சிறப்பு வழி பாடுகள் நடைபெற்றுக் கொண்ருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கொழும்பு நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தில் குண்டுவெடித்ததில் உடல் பாகங்கள் தேவா லயத்துக்கு வெளியே தெறித்து விழுந்தன.


வெடிப்பின் வேகத்தினால் தேவாலயத்தின் கூரை வெடித்துப் பறந்தது; ஓடுகளும் கண்ணாடிகளும் வெடித்துச் சிதறின; வழி பாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கதறியடி ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாகக் காணப்பட்டது. சற்று நேரத்தில் கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டலிலும் நீர்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.


ஷங்ரிலா ஹோட்டலில் இலங்கை நேரப்படி காலை 9 மணி அளவில் பெரும் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாக ஊழியர்கள் கூறினர். இங்கு நடந்த தற்கொலைத் தாக்குத் தலில் சி4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கைச் செய்திகள் கூறின.
பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. பெரும் பதற்றம் நிலவிய நிலையில், பிற்பகலில் தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில பூங்கா ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. இச்சம்பவங்களிலும் பலர் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை, போலிஸ், ராணுவம் ஆகியவை விசாரணையில் ஈடுபட்டு உள்ளன என்று தற்காப்பு அமைச்சுக் கூறியது. நாட்டின் பாதுகாப்புக் கருதி சமூக வலைத் தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள தாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கூறியது. உயிரிழந்தவர்களில் குறைந்தது 35 பேர் வெளிநாட்டினர் என்று போலிஸ் தகவல்கள் கூறின. உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்கள் குறித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர். நாடு முழுவதும் நேற்று மாலை 6 முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா விடுதிகள், மருத்துவமனைகள், தூதரகங்கள், முக்கிய அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!