கொழும்பு விமான நிலையம் அருகே வெடிபொருட்கள்

கொழும்பு விமான நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த குழாய் வெடிகுண்டை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்துள்ளனர். அது சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பெரிய முனையத்திற்குச் செல்லும் சாலையில் அந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமையன்று அந்நாட்டின் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் நேர்ந்ததை அடுத்து போலிசார் உச்ச விழிப்புநிலையில் உள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகைக்காகத் தேவாலயங்களில் திரண்டிருந்த கிறிஸ்துவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 450 பேர் காயமடைந்தனர்.