சுடச் சுடச் செய்திகள்

நான்காம் கட்ட தேர்தல் தொடக்கம்

ஒன்பது மாநிலங்கள் பங்கேற்கும் இந்தியாவின் நான்காம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டத்தில் 120 மில்லியன் பேருக்கு மேலானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

நான்காம் கட்ட தேர்தலில் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் அவற்றுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

1. பீகார் (ஐந்து தொகுதிகள்)

2. ஜார்கண்ட் (மூன்று தொகுதிகள்)

3. மத்திய பிரதேசம் (ஆறு தொகுதிகள்)

4. மகராஷ்டிரா (17 தொகுதிகள்)

5. ஒடிசா (ஆறு தொகுதிகள்)

6. ராஜஸ்தான் (13 தொகுதிகள்)

7. உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்) 

8. மேற்கு வங்காளம் (எட்டு தொகுதிகள்)

9. காஷ்மீரின் குல்காம் மாவட்டம் (ஒரு தொகுதி)

இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

இந்தி திரைத்துறையினர் பலர் இன்று வாக்களிக்கவுள்ளதால் இன்றைய வாக்களிப்பு ஊடகங்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon