ஒடிஷா: ஃபானி புயலில் இருவர் பலி

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் ஃபானி புயல் கடற்கரையைத் தாண்டிதைத் தொடர்ந்து இருவர் பலியாகியுள்ளனர். புயல் காற்றில் விழுந்த மரங்களால் அடிபட்டு அவர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கூடிய கனத்த மழை இடைவிடாமல் பெய்கிறது.
புயலில் பல்வேறு மரங்கள் சாய்ந்ததுடன் சில இடங்களில் குடிசைகள் இடிந்து தரைமட்டமாயின. மணிக்கு 175 கிலோமீட்டர் புயல் காற்று வீசுவதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஒடிஷாவின் 11 கரையோர மாவட்டங்களிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவ அதிகாரிகள் போர்க்கால பாணியில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் பேரிடர் நிர்வாக அமைப்பு, கடற்படை, ராணுவம் ஆகியவை அரசாங்கத்துடன் துரிதமாகச் செயல்படுவதாக அவர் கூறினார்.

புயலின் காரணமாக பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!