சுடச் சுடச் செய்திகள்

லிவர்பூல் கோல் மழை; பார்சிலோனா தோல்வி

சேம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியில் லிவர்பூல் அணி மிகவும் அதிசயிக்கத்தக்க முறையில் மீண்டு வந்து போட்டியின் இறுதிச் சுற்றில் அடியெடுத்து வைக்க உள்ளது. பேரார்வம், அசையா நம்பிக்கை, மனத்திடம் ஆகியவற்றுடன் ஆடிய லிவர்பூல் அணியினர், பார்சிலோனா அணியை 4-0 கோல் கணக்கில் தோற்கடித்து ரசிகர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினர்.

லிவர்பூலுக்குச் சொந்தமான ‘அன்ஃபீல்ட்’ அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் லிவர்பூல் அணிக்கு செர்டன் ஷக்கிரி இடது காலால் கோலடிக்க முயன்றபோதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆயினும் இந்தக் கவலையைப் போக்கும் விதமாக வீரர் டிவோக் ஒரிஜி ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் லிவர்பூலுக்கு ஒரு கோலைப் புகுத்தினார். பார்சிலோனா அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி 45வது நிமிடத்தில் கோலைப் புகுத்த முற்பட்டார்; ஆனால் காற்பந்து கோல் வலைக்குள் புகவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு அதிகரித்தது. லிவர்பூல் ஆட்டக்காரர் ஜொர்ஜினியோ வைனோல்டம் 54வது நிமிடத்தில் ஒரு கோலையும் 56வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் புகுத்தி தனது அணியினரை மகிழ்வித்தார். இதன் தித்திப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் டிவோக் ஒரிஜி 79வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலைப் புகுத்தி இந்த ஆட்டத்தில் தனது அணியின் வெற்றியை அறுதியிட்டார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon