சிங்கப்பூரில் ‘மங்கிபாக்ஸ்’:  உறுதி செய்த சுகாதார அமைச்சு

பயிலரங்கு ஒன்றில் கலந்து கொள்ள கடந்த மாதம் நைஜீரியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த 38 வயது ஆடவருக்கு 'மங்கிபாக்ஸ்' எனும் ஒரு வகை அம்மை நோய் இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று உறுதி செய்தது.

'மங்கிபாக்ஸ்' அம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதர் களுக்குப் பரவும் ஓர் அரிய வகை நோய் என்று அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது.

'மங்கிபாக்ஸ்' அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆடவர் தற்போது தேசிய தொற்றுநோய் நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சு தெரி வித்தது.

அவருக்கு மிக அருகில் சென்ற 23 பேரைக் கண்டு பிடித்துவிட்டதாக அமைச்சு கூறியது.

அவர்களுக்கும் நோய் பரவி இருக்கக்கூடும் என்று அஞ்சப் படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மனிதர்களிடமிருந்து மனிதர் களுக்கு இந்த நோய் பரவும் சாத்தியங்கள் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அமைச்சு தெரி வித்தது.

பாதிக்கப்பட்ட ஆடவர் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு நைஜீரியாவில் திருமண விழாவில் கலந்துகொண்டதாக அறியப்படுகிறது.

அங்கு அவர் ஆப்பிரிக்க வனவிலங்கு மாமிசம் உட் கொண்டதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் அவர் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள சர்ச் ஸ்திரீட்டில் உள்ள சம்சுங் மையத்தில் பயிலரங்கு ஒன்றில் கலந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!