You are here

இளையர் முரசு

பல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல் இந்தியர் அல்லாத மாணவர்களும் தீபாவளிப் பண் டிகையை அக்டோபர் 31ஆம் தேதியே தங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந் தனர். இவ்வாண்டு என்டியு தமிழ் இலக்கிய மன்றம் என்டியுவின் சீக்கிய மன்றம் மற்றும் பட்டதாரி மாணவர்கள் கழகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை, மருதாணி இடுவது, பல்லாங்குழி விளை யாடுவது போன்ற பல்வேறு கலா சார நடவடிக்கைகளைக் கொண்ட தீபாவளி கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

என்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்

இந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார மன்றத்தின் ஏற்பாட் டில் நடந்தேறியது தீபாவளி இரவு 2018. சுமார் 350 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வினை இந்திய கலாசார மன்றம், சீக்கிய மன்றம், இந்து மன்றம் மற்றும் என்யுஎஸ் நாச் என நான்கு மன்றங்கள் ஒருங் கிணைந்து நடத்தின. நிகழ்ச்சி வழக்கமான குத்து விளக்கு ஏற்றலுடனும் வரவேற்பு நடனத்துடனும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ‘பிரின்ஸ் ஜார்ஜ் பார்க்’ குடியிருப்பில் தொடங்கியது.

களை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு

ஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி. காலப்போக்கில் பல்வேறு காரணங் களால் அங்குள்ள கடைகள் பல இடம்பெயர்ந்தன; சில மூடப்பட் டன. அவ்விடம் வாடிக்கையாளர் கள் பலரை இழந்தது. பொலிவிழந்த அக்கடைத் தொகுதியை மீண்டும் மக்கள் ஒன்றுகூடும் இடமாக உருவாக்கு வதற்கு, கடைத் தொகுதியின் கட்டட வடிவமைப்பை மாற்றியமைப் பதோடு அந்த இடத்தையும் உரு மாற்றும் திட்டத்தை தயாரித்துள் ளார் செல்வி மதுமிதா தங்கமணி, 19.

சமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்

ப.பாலசுப்பிரமணியம்

நான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை வல்லுநராகி உள்ளார். தமது 21ஆம் வயதிலிருந்து செய்துவந்த பாதுகாவல் பணி இவரை புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. லிட்டில் இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் உணவு விழாவையொட்டி நடந்த நான்கு நாள் ‘சுவை’ உணவு அங்கத் திற்குப் பாதுகாவலராகப் பொறுப்பு வகித்தார் பெர்னார்ட். அப்போது, தேவகி சண்முகம், கே.தாமோதரன், பாலசுந்தரம் பிள்ளை போன்ற பிரபல இந்திய சமையல் வல்லுநர்களைச் சந்திக் கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

மன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்

வைதேகி ஆறுமுகம்

மனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர், 24 மணி நேர ஆலோசனை போன்ற பலதரப்பட்ட சேவைகளைச் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் (Samaritans of Singapore) வழங்கி வருகிறது. அந்த வகையில் வெவ்வேறு காரணங்களி னால் மனதளவில் துவண்டுபோய் வாழ்வில் இருளைச் சந்தித்திருக்கும் இளையர்களுக்கு உதவும் நோக்கில் இம்மாதம் 10ஆம் தேதியன்று ‘த்ரு தி நைட்’ (#Throughthe Night) எனும் இயக்கத்தை இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தின் மூலம் இச் சங்கம் தொடங்கவிருக்கிறது.

இலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்

உள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’ என்ற நூலைச் சென்ற ஆண்டிலிருந்து வகுப்பில் படித்துப் பயன்பெற்ற உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவருடன் நிகழ்ந்த உரையாடலில் தங்கள் ஐயங் களைத் தீர்த்துக்கொண்டதோடு அவர் பகிர்ந்துகொண்ட புதிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டனர். ‘கூவி அழைக்குது காகம்’ என்ற புத்தகத்தை மாணவர்கள் அவ்வப்போது வகுப்பின் தொடக் கத்தில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் படிப்பார்கள்.

துயர் துடைக்க பயிலும் இம்ரான்

உயர்நிலை நான்கில் பயின்றபோது ஆசியப் பெண்கள் நல்வாழ்வுக் கழகத்தில் மூன்று வாரங்களுக்கு வேலையிடப் பயிற்சியில் ஈடுப்பட் டிருந்தார் 21 வயது முஹம்மது இம்ரான் ஜ‌ஷிருதீன். அங்கு நோயால் வேதனையுற்ற உடல் குறையுள்ளோரையும் முதியோரை யும் பார்த்த திரு இம்ரான் அவர்களைப் போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவவேண்டும் என்று உறுதி பூண்டார்.

Pages