மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும்

மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும் சிங்கப்பூரின் புதிய 2016 வரவுசெலவுத் திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துமுடிந்துவிட்டது. நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவக்கூடிய ஏராளமான திட்டங்கள், செயல் திட்டங்கள், கொள்கைகள், செலவுத்தொகை, வரவுத் தொகை அனைத்தும் அமைச்சு வாரியாக அறிவிக்கப்பட்டு அவை பற்றி ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப் பட்டன.

சிங்கப்பூரில் இதுநாள் வரையில் தாக்கலாகி வந்துள்ள வரவுசெலவுத் திட்டங்களில் பலவும் பெரும்பாலும் கண் கூடான விளைவுகளை ஏற்படுத்துவதிலேயே ஒரு-மித்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இப்போதைய 2016 திட்டம், கண்கூடான விளைவுகளில் மட்டுமின்றி மனப்போக்கின் மாற்றங்களி லும் குறிப்பிடத்தக்க வகையில் ஒருமித்த கவனம் செலுத்துவதாக இருக்கிறது.

சிங்கப்பூரைக் குடும்ப வாழ்வுக்குத் தலைசிறந்த இடமாக ஆக்கி, இங்கு எல்லா குடும்பங்களையும் பொருளியல் ரீதியில் கைதூக்கிவிடும் அளவுக்குப் பற்பல திட்டங்களைப் புதிய வரவுசெலவுத் திட்டம் கொண்டுள்ளது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதிய திட்டம் நீரிழிவு நோய்க்கு எதிராக போர் தொடுத்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடித் தருவதையும் புதிய வேலைகளுக்கேற்ப அவர்களின் தகுதிகளை வளர்ப்பதையும் திட்டம் கொண்டுள்ளது. ஏராளமான திட்டங்கள் உண்டு என்றாலும் அவற்றில் பலவும் சிறார்களை மனதில் கொண்டு தீட்டப்பட்டு இருப்பது மனதைத் தொடுவதாக இருக்கிறது. 2021லிருந்து தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் பிள்ளைகளுக்கு மொத்த மதிப்பெண்ணுக்குப் பதில் எழுத்து அடையாளமே இடம்பெறும் என்பதும் பிள்ளைச் செல்வத்தைப் பேணும் வகையில் மணமாகாத தாய்மார் களுக்கும் சம்பளத்துடன் கூடிய 16 வார விடுப்பு உண்டு என்பதும் மனதில் படும் திட்டங்களாக உள்ளன.

இதுநாள் வரையில் பள்ளிக்கூடத்தில் ஒரு பிள்ளையின் செயல்திறன்தான் முக்கியம் என்ற நிலை மாறி இனிமேல் அந்தப் பிள்ளைதான் முக்கியம் என்று கருதிச் செயல்படும் அளவில் கொள்கை மாற்றங்கள் இடம்பெறுவதைக் காண முடிகிறது. அதேபோல் ஆசியப் பண்பாட்டில் திருமண வாழ்வு=இல்லறம்=பிள்ளைப்பேறு முறைதான் அடிப்படை என்பதால் அதை உணர்ந்து அதற்கு யாதொரு கெடுதலும் வராமல் அதேவேளையில் பிள்ளைச் செல்வத்தைக் கட்டிக் காக்கும் நோக்கத்துடன் மணமாகா தாய்மார்களுக்கு உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது.

இத்தகைய தாய்மார்களின் பிள்ளைகளுக்கும் சேமிப்புக் கணக்கு உண்டு. இத்தகைய பிள்ளைகளும் சமூகத்தில் தார்மீக அடிப்படையில் சரிநிகராக அங்கீகரிக்கப்படுவது இதன்மூலம் சாத்தியமாகிறது.

இதையே நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவா தத்தை முடித்துவைத்துப் பேசிய நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் சுட்டிக்காட்டினார்.

அவர் குறிப்பிட்ட வேறு ஓர் அம்சமும் கவனத்தை ஈரப்பதாக உள்ளது. ஆண்டுதோறும் வரவுசெலவுத் திட்டம் தாக்கலாகிறது. அதைப் பற்றி மன்றத்தில் பல நாட்கள் விவாதிக்கப்படுகிறது. அந்த விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு, அதில் நாட்டம் உங்களுக்கு இருக்கிறதா?

அந்த விவாதத்தில் பொதுவாக மக்களுக்கு அக்கறை இல்லை, நாட்டம் இல்லை என்பதே உண்மை. மக்கள் தங்களைப் பாதிக்கின்ற கொள்கைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியம் இருக்கும் போதிலும் இதில் அலட்சியப்போக்குடன் அவர் கள் இருந்துகொள்வது ஒரு சவாலாகவே ஆகிவிட்டது. இந்தச் சவாலைச் சமாளிப்பதில் அரசாங்கம் கிரியா ஊக்கியாகத்தான் செயல்படமுடியும் என்பதைத் திருவாட்டி ஹலிமா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

உண்மைதான். மக்கள்தான் தங்கள் நாட்டத்தை, அக்கறையை இந்த விவாதங்கள் பக்கம் திருப்பவேண்டும். அவர்கள்தான் தங்களைப் பாதிக்கும் கொள்கைகளை, கோட்பாடுகளை, திட்டங்களைப் புரிந்துகொண்டு, தெரிந்துகொண்டு இருக்கவேண்டும்.

இதற்கு ஏதுவாக அரசாங்கம் புதிய புதிய திட்டங்களை புத்தாக்க வழிகளில், மேலும் எளிமையான பாணிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். மக்களும் அவற்றில் நாட்டத்துடன் ஈடுபாடுகொள்வர் என்று நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!