சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா உறவுக்கு இன்னும் உரம்

ஆசியாவில் தென்கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, நிலப்பரப்பு குறைந்த சிங்கப்பூரும் ஆசிய பசிபிக்கின் முக்கிய முதுகெலும்புகளில் ஒன்றாக இருக்கின்ற, பெரும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவும் மிக முக்கியமான ஒரு புதிய உடன் பாட்டில் கையெழுத்திட்டு உள்ளன.
வர்த்தகம், பொருளியல், புத்தாக்கம், அறிவியல், தற்காப்பு, கல்வி, பயணம், இளையர்கள், கலை கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த உடன்பாட்டை இரு நாடுகளும் பெரிதும் வரவேற்று இருக்கின்றன.
'பரந்த உத்திபூர்வ உடன்பாடு' என்று குறிப்பிடப்படும் அந்த இரு நாட்டு இணக்கம், இதுவரையில் இல்லாத அளவுக்கு இருதரப்பு உறவை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை இரு நாடுகளுமே வெளிப் படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக தற்காப்புத் துறையில் இடம்பெறும் உடன்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இன்று நேற்று அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருதரப்பு உறவைப் பேணி வளர்த்து வரும் நாடுகள். 1965ல் சிங்கப்பூர் சுதந் திரம் பெற்றதும் சுதந்திர சிங்கப்பூருடன் முதலில் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.
ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற, படிக்கின்ற சிங்கப்பூரர் கள் ஏராளம். அதேபோல் சிங்கப்பூரில் ஆஸ்திரேலியர் களின் ஈடுபாடும் அதிகம்.
இரு நாடுகளுக்கும் இடையில் முன்பு ஏற்பட்ட ஓர் இணக்கம் காரணமாக, 1990 முதலே ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் ராணுவம் பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 6,000 சிங்கப்பூர் துருப்புகள் அங்கு பயிற்சி பெறுவதுண்டு.
இப்போது இந்த உடன்பாடு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்திருக்கிறது. ஆண்டுக்கு 14,000 சிங்கப்பூர் துருப்பினர் ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கிழக்கு ஆசியாவில் உள்ள தென்சீனக் கடல் பகுதி, உலகில் கப்பல் போக்கு வரத்துக்கு அதிமுக்கியமானதாகத் திகழ்கிறது.
என்றாலும் அந்தக் கடல் பகுதியில் செயற்கைத் தீவு களை ஏற்படுத்திக்கொண்டு சீனா தன்னுடைய ஆதிக் கத்தைப் பலப்படுத்த முயன்று வருவதால் உலகின் இந்தப் பகுதியில் வல்லரசு படைபலச் சமநிலை தடுமாறுவதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் ராணுவ ரீதியிலான தலையெடுப்பை ஒரு மிரட்டலாகக் கருதும் அமெரிக்கா, அதனைச் சரிசெய்ய ஆஸ்திரேலியாவில் தன்னுடைய படைபலத்தைப் பெருக்கி வருகிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில் ஆஸ்திரேலியா வுடன் ராணுவ ரீதியில் தன்னுடைய உறவை சிங்கப்பூர் இறுக்கிக்கொள்வது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
சிங்கப்பூரின் ராணுவம் இந்த வட்டாரத்தில் நன்கு பயிற்சி பெற்ற, நல்ல ஆற்றல் வாய்ந்த ராணுவமாகத் திகழ்ந்து நாட்டின் அரணாக அது பலப்பட புதிய உடன்பாடு உதவும் என்பதில் ஐயமில்லை.
அதேபோல் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்= அதாவது 2003ல் தாராள வர்த்தக உடன்பாட்டை இரு நாடுகளும் ஏற்படுத்திக்கொண்டன. இதன் பலனாக இன்று ஆஸ்திரே லியாவின் ஐந்தாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சென்ற ஆண்டில் இரு வழி வர்த்தகத்தின் மதிப்பு $19 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்.
இரு நாடுகளும் ஒன்று மற்றதன் பட்டப்படிப்புகளை அதிகம் அங்கீகரிக்கவும் இருநாடுகளின் மக்களுக்கு இடையில் தொடர்புகளை அதிகப்படுத்தவும் கலை, கலா சாரத்தைப் பேணி வளர்க்கவும் ஏற்பட்டு இருக்கும் இணக் கம், இந்த வட்டார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பது திண்ணம்.
ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்திரேலியா செல்லும் சிங்கப்பூ ரர்கள் 400,000 பேர். புதிய உடன்பாட்டின்படி புதிய விசா ஏற்பாடுகள் இடம்பெறும் என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
தென்கிழக்கு ஆசியாவையும் ஆசிய பசிபிக்கையும் இணைக்கும் இந்த சிங்கப்பூர்=ஆஸ்திரேலியா உடன்பாடு இருநாடுகளுக்கும் மட்டுமின்றி இந்த வட்டாரத்துக்கும் உலகுக்கும் பொருளியல் ரீதியிலும் அமைதி வழியிலும் உதவும் என்றும் புதிய உடன்பாடு தென்சீனக் கடல் பகுதியின் அமைதிக்கும் அதன் ஆற்றலுக்கும் கூடுதல் சக்தியாகத் திகழும் என்றும் நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!