வாக்கும் வக்கும்

தமிழ்நாட்டில் 15வது சட்டமன்றத் தேர்தலில் 234 உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நாளை நடக்கிறது. அந்த மாநிலத்தில் வசிக்கும் சுமார் 7 கோடி (70 மில்லியன்) பேரில் கிட்டத்தட்ட 5.8 கோடி வாக்காளர்கள் மாநில நிர்வாகத்தை யார் கையில் ஒப்படைப்பது என்பதை நாளை முடிவு செய்கிறார்கள். இவர்களில் 40 மில்லியன் பேருக்கு வயது 50க்கும் குறைவு.

" மாநிலத்தை ஆளும் பொறுப்பை என்னிடம் தாருங்கள், எங்களிடம் தாருங்கள். நாங்கள் மக்களுக்குப் பலவற்றை யும் தருகிறோம். பல திட்டங்களை வைத்து இருக்கிறோம்" என்று சொல்லி அரசியல்வாதிகள் பலரும் வாக்காளர் களைக் கெஞ்சிக்கேட்கும் அணுகுமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் தேர்தலின்போது காணலாம். ஆனால் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கடந்த இரண்டு மாதமாக நடத்திய சுய தம்பட்ட பிரசாரமோ நாட்டில் எங்கும் காண முடியாத ஈடுஇணை இல்லா ஒன் றாக இருந்தது. ஏழைக்குப் பணம் தேவைப்படுவதைவிட, பசித்தவனுக்கு உணவு தேவைப்படுவதைவிட அதிகமாக விளம்பரம் தேவைப்படும் தமிழகத் தலைவர்களைப் பிரசாரத்தின்போது காண முடிந்தது.

இந்தத் தடவை போட்டியிடும் 3,776 வேட்பாளர்களில் பலர் மீது குற்றவியல் புகார்கள் உண்டு. ஒரு பிரபல கட்சி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வந்த ஒருவர், தன் கார் ஓட்டுநரின் கைபேசியை வாங்கி பேசி அதில் இருந்து கார் ஓட்டுநரது மனைவியின் எண்ணைத் தெரிந்து கொண்டு பிறகு அந்தப் பெண்மணிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் போலிஸ் வரை புகார் போயிருக் கிறது. இப்படிப்பட்ட வேட்பாளர்களும் களத்தில் இருக் கிறார்கள். மீண்டும் போட்டியிடும் 89 வேட்பாளர்களின் சொத்து ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது.

இதை எழுதிக்கொண்டு இருந்தபோது கிடைத்த ஒரு செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வாக்காளர் குடும்பத்துக்குப் பிரபல அரசியல் கட்சி நேற்று ரூ500 கொடுத்ததாகவும் வேறு கட்சி ரூ.1,500 தர முன்வந்ததை யடுத்து அந்த வாக்காளர் அதைப் பெற்றுக்கொண்டு ரூ500 பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தெருத்தெருவாகப் பேச்சு காதில்கேட்டது.

இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் தலைவர்களோ ஆயிரமாயிரம் வழக்குகளை எல்லாம் எதிர்நோக்கியவர்கள். அவர்கள் நிதியை நாடுவோராகவும் நீதிக்குச் சவால் வி-டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

வழக்கம் போல் கட்சிகள் இலவசங்களை அள்ளி இரைத்திருக்கின்றன. ஏறக்குறைய எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தங்கம் முதல் சாதாரண உப்பு வரை எல்லா இலவசத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் இப்படி எனில் தமிழக வாக்காளர்களைப் பார்க்கையில் இவர்கள் பல வண்ணங்களைக் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

"திராவிடக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் 11,500 கோடி ரூபாயை இலவசங்களாகக் கொடுத்தே பாழ்படுத்தி இருக்கின்றன. பணத்தை உருப்படியான காரியங்களுக்குப் பயன்படுத்தி இருக்கலாம்" என்று ஓர் அரசியல்வாதி செய்த பிரசாரத்தைக் கேட்டு அப்படியா என்று தமிழக வாக்காளர்களில் பலரும் ஒரு பக்கம் வியப்படைந்தாலும் மறுபக்கம் இலவசங்களைப் பெற அவர்கள் தங்கள் கையை நீட்டுவது கண்கூடாகத் தெரிகிறது.

இத்தகைய வாக்காளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு மாநிலத்தில் வாக்குச் சீட்டை வைத்துக்கொண்டு கொஞ்சம் சிந்திக்கும் நடுத்தர வர்க்க மக்களோ 'எரிகின்ற கொள்ளி யில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்று தடுமாறு கிறார்கள். இந்தத் தேர்தலில் பல புதுமைகளும் இடம்பெறு கின்றன. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி என்று பலவும் தனித்தனியாகக் களத்தில் இறங்கி இருக்கின்றன. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத அளவுக்குத் தகவல் தொழில்நுட்பப் புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

மொத்தத்தில் தமிழக அரசியல் சூழல் மாறி இருந்தாலும் இந்தத் தேர்தலிலும் போட்டி கடந்த 27 ஆண்டுகளைப் போலவே அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் என்பதே திண்ணம். இந்தச் சுழற்சியில் இந்தக் கெடு திமுகவுக்கு உரியதாக இருக்கிறது. யாருமே கணிக்க முடியாத அள வுக்குப் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையம் 100% வாக்குப் பதிவைச் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. ஆணையத் தின் இக்குறிக்கோள் நிறைவேறும்பட்சத்தில் வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமை நிறைவேறும். அந்தக் கடமையை நிறைவேற்ற தயாராகிவிட்ட வாக்காளர்கள், தங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் அள வுக்கு வக்கு இல்லாதவர்களாகவா இருப்பார்கள்?

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!