தெள்ளத்தெளிவாக உணர்த்திய வாக்காளர்கள்

தமிழ்நாட்டில், அதன் 15வது சட்டமன்றத்தைத் தேர்ந்து எடுக்க அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலும் அதன் முடிவுகளும் இதுநாள் வரையில் அந்த மாநிலத்தில் நடந்துள்ள பல தேர்தல்களில் இருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. பல தேர்தல்களில் இல்லாதபடி இத்தேர்தலில் ஆறு முனைப் போட்டி இருந்ததும் அதி நவீன தகவல்தொழில் நுட்பங்களும் கணினி இணையச் சமூகத் தளங்களும் தேர்தலில் காட்டிய ஈடுபாடும் மிகவும் புதுமையானவை.

இந்தத் தேர்தலில் தோல்வி மேல் தோல்வி என்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பலருக்கும் பல தோல்விகள் ஏற்பட்டன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பொறுப்பு ஏற்றுக்கொண்ட இந்தியாவின் தேர்தல் ஆணையம், நூற்றுக்கு நூறு வாக்குப் பதிவைச் சாதிக்கப்போவதாக அறிவித்து எடுத்த பெரும் முயற்சியில் தோற்றது. 74% வாக்காளர்தான் வாக்கு அளித்தனர்.

தேர்தலில் பணம் விளையாடியதை தடுக்க முடியவில்லை என்று சொல்லி நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் வாக் களிப்பை ஆணையம் ஒத்திவைத்து அதிலும் தோற்றது.

திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் 1984ஆம் ஆண்டு முதல் மாறிமாறி மாநிலத்தை ஆண்டு வரும் ஒரு கலாசாரத்தைக் கைவிட்டுவிடாமல் எப்படியா வது இத்தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்டது.

மாநிலத்தின் வரலாற்றில் இடதுசாரிகள் இல்லாத சட்டமன்றம் என்று ஒன்று இதுவரை இருந்ததில்லை. இந்தத் தேர்தலிலும் இதைச் சாதிக்கவேண்டும் என்று முயன்ற கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் இந்த முயற்சியில் தோல்வி கண்டன. புதிய சட்டமன்றம் இடதுசாரிகள் இல்லாத மன்றமாகத் திகழப்போகிறது.

திராவிட ஆட்சிகளில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் மாநிலம் முன்னேறும் என்றும் பெரும் பிரசாரம் செய்த தேசிய கட்சியான பாஜக, போன இடம் தெரியாமல் போய் தோல்வி அடைந்துள்ளது.

மாநில அரசியலில் மூன்றாவது அணி என்று ஒன்று அவசியம் என்றும் அதற்கான அடிப்படையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்திவிடவேண்டும் என்றும் திட்டமிட்டு அதற்காக முயன்ற மக்கள் நலக் கூட்டணி என்ற அணியும் தோல்வி அடைந்தது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அரியணை ஏறிவிட வேண்டும் என்று முயன்ற பாட்டாளி மக்கள் கட்சியும் தோல்வி அடைந்தது. வாக்களித்த ஒவ்வோர் 1,000 பேரிலும் 13 பேர் எந்த வாக்காளரையும் பிடிக்கவில்லை என்று தெரியப்படுத்திவிட்டனர்.

இத்தேர்தலில் இவ்வளவு தோல்விகள் இருந்தாலும் ஒரே ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைத்து இருக்கிறது. மாநிலத்தை ஆளும் அதிமுகவின் தலைவியான ஜெய லலிதா தொடர்ந்து இரண்டாவது தவணையும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 6வது தடவையாக முதல்வராகிறார் என் றாலும் இப்போது அவர் பெற்று இருக்கும் வெற்றியும் இதுநாள்வரை அவர் பெற்ற வெற்றிக்கு ஈடாக இல்லை.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு ஏறக் குறைய நிகரான வெற்றியை எதிர்த்தரப்பான திமுகவுக்குக் கொடுத்து ஜெயலலிதாவை கட்டுப்படுத்துவதற்கு வாக்காளர்கள் வழிகண்டு இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் எதிர்த்தரப்பு அதிக இடங்களில் வென்றுள்ளது.

மொத்தத்தில் பார்க்கையில் இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு அரசியல் இரு திராவிடக் கட்சிகளுக்கே உரியது என்பதை யும் மாநிலத்தில் மூன்றாவது அணி என்று எதுவும் இப்போதைக்குத் தேவையில்லை என்பதையும் மறுஉறுதிப் படுத்தி இருக்கிறது. என்றாலும் திமுக, அதிமுக இரு கட்சிகளும் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலை இத்தேர்தல் ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக திமுகவும் பொறுப்புமிக்க ஆளும் கட்சியாக அதிமுகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வாக் காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெள்ளத்தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள்.

அரசியல் அனுபவம் வாய்ந்த இரு கழகங்களும் இதை சாதித்து மாநிலத்தின், மாநில அரசியலின் மதிப்பை உயர்த்தும் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!