அஷ்வின்கள் நிறைந்த சமூகமாவோம்

பள்ளிக்கூடம் சென்றுவிட்டு நண்பர்களுடன் வீட்டுக்குத் திரும்பிச்சென்றுகொண்டு இருந்த ஒரு 12 வயது பையன், திடீரென்று சாலையில் வாகன விபத்து நிகழ்ந்ததைக் கண்டு தன்னை அறியாமலேயே ஓடிச்சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி இருக்கிறான். 'ஆபத்து போகாதே' என்று அவனை நண்பர்கள் தடுத்தனர். பெரியவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பலரும் விபத்தைப் படம் எடுத்துக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் நின்றிருந்தனர்.

உதவி செய்தாக வேண்டுமே என்ற உணர்வில் அந்தப் பையன் மட்டும் தன்னை மறந்து விரைந்து ஓடி வாகன ஓட்டிகளுக்கு=அவர்களில் ஒருவர் கர்ப்பிணி-=உதவி மருத்துவ வண்டி வரும் வரையில் அங்கேயே இருந்துவிட்டு பிறகு வீட்டுக்குப்போனான். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பையனுக்கு விருது அளித்து அவனை மிகவும் பாராட்டி இருக்கிறது. அஷ்வின் குணசேகரன் என்ற அந்தப் பையன் இன்று குணக்குன்றாக, நற்குடி நாயகனாக பலரின் உள்ளத்திலும் குடியேறி இருக்கிறான்.

பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது உதவ வேண்டும் என்ற எண்ணம் அஷ்வினுக்கு மட்டும் அவனை அறியாமலேயே ஏற்பட என்ன காரணம்?

"மனிதன் என்று இருந்தால் மற்றவருக்கு உதவ வேண்டும். கருணை மனதுடன் இருக்கவேண்டும்" என்று அந்தப் பையனின் தாயார் அவனுக்குப் போதித்து வந்தது வீண்போகவில்லை. மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு அஷ்வினின் காரணியில் (ஜீன்) சிறுவயதில் இருந்தே பசுமரத்து ஆணிபோல் நன்கு பதிந்துவிட்டது.

சிங்கப்பூர் எல்லாரையும் உள்ளடக்கும் சமூகத்தைச் சாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நாடு. பவ்வேறு நிலை யிலான மக்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை போன்ற அணுக்கமான சூழலில் வாழும் நாடு.

சிங்கப்பூர் சமூகம், சகோதரத்துவ சமவாழ்வை, விட்டுக் கொடுத்து வாழும் வாழ்வை நாடும் ஒரு சமூகம். ஒவ்வொரு சமூகத்திலும் உதவி தேவைப்படுபவர்கள் இருப்பார்கள். இதற்குச் சிங்கப்பூர் விதிவிலக்கல்ல. சிறார்கள் முதல் முதியவர்கள் வரை உதவி தேவைப்படுவோர் லட்சக்கணக்கில் இங்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம்தான் உதவ வேண்டும். நமக்கென்ன என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டால் அத்தகைய ஒரு நிலையைச் சிங்கப்பூர் தாங்காது. அது மட்டுமல்ல, உதவி தேவைப்படுவோருக்கு கொடுக்கப்படும் அதே உதவிகள் தனக்கும் வேண்டும் என்று உதவி தேவைப்படாதவர்களில் ஒரே ஒருவர் அரசாங்கத்தை எதிர்நோக்கத் தொடங்கினாலே போதும், நாட்டுக்குப் பின்னடைவுதான் ஏற்படும்.

சிங்கப்பூர் சமூகம் தனித்தன்மையுடன் ஐக்கியத்துடன் பிணைப்புமிக்க நிலையில் தொடர்ந்து இருந்துவர வேண்டு மானால் அதன் மக்களுக்குத் தொண்டூழிய மனப்பான்மை, கருணை உணர்வு, பரிவு, பகிர்வு உணர்வு எல்லாம் நிரந்தரமான அவசியம் என்பது வெளிப்படை.

நாட்டின் முதல் 50 ஆண்டு கால வரலாற்றில் சிங்கப்பூரர் கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனிச்சிறப்புடன் திகழ்ந்து வந்துள்ளதற்கு அவர்களின் இந்த தனிப்பட்ட தேசிய அடையாள இயல்புகள் மிகவும் உதவி உள்ளன. இந்த உணர்வுகளை இன்னும் பலப்படுத்தி அடுத்த 50 ஆண்டுகளில் மேலும் கருணைமிக்க சிங்கப்பூரைச் சாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உதவி மனப்பான்மை, தொண்டூழியம், நன்கொடை எண்ணம் எல்லாம் சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரின் காரணியிலும் வேர் ஊன்றவேண்டும். இதுவே அவர்களின் வாழ்க்கை வழியாகவேண்டும் என்பது இலக்கு. இந்த இலக்கு நிறைவேறவேண்டுமானால் சிங்கப்பூரர் ஒவ்வொருவரும் அஷ்வினாக ஆக வேண்டும். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு ஓடிய அஷ்வினின் உணர்வு நம் எல்லாருக்கும் வேண்டும். உதவி மனப் போக்கு ஒவ்வொருவரிடமும் ஏற்படவேண்டும். சிங்கப்பூரருக்கு இளம் வயதிலேயே இந்த உணர்வைப் பதியவைப்பது நல்ல பலன் அளிக்கும். இதில் அஷ்வினின் தாயார் ஆயிரமாயிரம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட சுயநலம் பாராத பொதுநல மனப்பான்மை நம்மை வாழவைத்து மற்றவர்களையும் வாழ வைக்கும் என்பதால், நாம் வாழவிட்டு வாழ்பவர்கள் என்பதால் நம்மில் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவே உதவி மனப்பான்மை உள்ளத்தை வளர்த்துக்கொள்வோம். இதில் நமக்கு அஷ்வின் ஓர் ஊக்குவிப்பாக இருக்கட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!