அவசரக் கோலம் அள்ளித் தெளிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தமது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினரிடையே வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது தொடர்பான அதிருப்தியை நீக்கி அதன் ஆதரவைப் பெறுவதற்கும் கட்சிக்கான மக்கள் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கடந்த பொதுத் தேர்தலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா வேண்டாமா என்பது குறித்து இரண்டாண்டுகளுக்குள் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதாக உறுதி அளித்தார்.

அந்த உறுதிமொழியும் அதன் பின் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்த தும் இனிவரும் ஆண்டுகளுக்கு பிரிட்டனின் தலைவிதியை நிர்ணயம் செய்யவுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய நாடு களுக்கிடையே பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தி அதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் போரிடும் சிந்தையைக் கைவிட்டு முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பதே இந்த ஐரோப்பிய ஒன்றியம் உருவா னதன் நோக்கம்.

இந்த ஒன்றியம் காலப்போக்கில் அதில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளைச் சேர்ந்தவர்களும் சரளமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் குடியேறி வேலை செய்யவும் ஒரு நாட்டின் பொருட்கள், தங்கு தடையின்றி மற்ற நாடுகளில் விற்பனை காணவும் ஏதுவாக ஒரே சந்தை என்னும் அடையாளத்தைப் பெற்றது.

இந்த அமைப்புக்கு என்று தனி நாடாளுமன்றம், பயனீட்டாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் என பரந்து விரிந்த அளவில், பல அம்சங்களில் தனித்தன்மை வாய்ந்த விதிமுறைகளை அமைத்து இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்-றிணைந்து செயல்பட்டன. இந்த அனுகூலங்கள் யாவும் இனி பிரிட்டிஷ் மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் சமூகம் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை. பிரிட்டனில் 65 வயதுக்கும் மேற்பட்டோரே அதிகமாக வாக்களித்தனர் என்பதுடன் இவர்களில் மூன்றில் இரு பங்கினர் தாங்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து வெளியேறுவதை விரும்புவதாகக் கூறினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், 18லிருந்து 24 வயதுடையோரில் 43 விழுக் காட்டினரும் 25லிருந்து 34 வயது நிரம்பியவர்களில் 54 விழுக்காட்டினரும் மட்டுமே பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பினர் என்றும் கூறப்படு கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஓய்வூதிய உயர்வு பாதிக்கப்படுவதுடன் பணவீக்கம், வீட்டுக் கடன் வட்டி விகித உயர்வு என பல சிரமங்கள் ஏற்படுவதுடன் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்ற பிரதமர் கேமரனின் பிரசாரம் எடுபடவில்லை.

இவை மிதமிஞ்சிய அச்ச உணர்வை உருவாக்கும் நோக்கம் கொண்டவை என்ற எண்ணம் மக்களிடையே மேலிட்டது. அத்துடன், பொதுமக்களில் பெருவாரியானவர்கள் ஒன் றியத்தில் இணைந்தபின் ஏற்பட்ட பல ஆண்டுகால பொருளியல் வளர்ச்சியால் எந்தப் பயனும் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

மாறாக, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாக பிராசாரம் மேற் கொண்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறுவதால் பிரிட்டனின் பங்காக வழங்கப்படும் தொகை யில் வாரம் ஒன்றுக்கு 350 மில்லியன் பவுண்டு கள் வீதம் மிச்சப்படும் என்ற வாதம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. இதை பிரசார வாசகமாக பேருந்து ஒன்றில் வடித்து அதை பொதுமக்கள் பார்வைக்கு அலங்காரமாக வைத்தவர்கள் இறுதியில் வென்றனர். இது உண்மையல்ல என்ற வாதம் காற்றில் பறந்தது.

தமது அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைத்து பிரிட்டன் ஒன்றியத்தில் இருப்பதே சிறந்தது என்று வாதிட்ட பிரதமர் டேவிட் கேமரன் பதவி துறந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனப்படி, பிரிட்டன் தான் வெளியேறும் எண்ணத்தை முறையாக தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இனி, பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்படும் வர்த் தக சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. அது தனக்கென இனி புதிய வர்த்தக ஒப்பந்தங்களையும் சந்தைகளையும் தேடிக்கொள்ள வேண்டும். மொத்தத்தில், பிரிட்டிஷ் மக்கள் அவசரக் கோலத்தை அள்ளித்தெளித்த கதை யாக அவசர முடிவெடுத்துள்ளதாகவே தோன்றுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!