மதிப்புக்கு உரியது மதிப்பெண் மட்டுமல்ல!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பிஎஸ்எல்இ' எனப்படும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு மதிப்பீட்டு முறை மாற்றங்கள் கடந்த புதன்கிழமை வெளியானது. இப்போது நடைமுறையில் இருக்கும் 'டி-ஸ்கோர்' முறைக்குப் பதிலாக எட்டு அடைவுநிலைகளைக் கொண்ட மதிப்பெண் தர அளவைமுறை 2021ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. நடப்பில் உள்ள 'டி=ஸ்கோர்' முறை மாணவர்களைத் துல்லியமாக, அதிகமாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்று பல காலமாகக் குரல்கள் ஒலித்து வந்த நிலையில் புதிய முறையின்படி அந்த வகைப்படுத்தல் பெரிதும் குறையும் என்பது வரவேற்கத்தக்க அம்சம்.

ஆனாலும், தம் பிள்ளைகள் பிஎஸ்எல்இ இறுதித் தேர்வில் உச்ச அடைவுநிலையைப் பெற்றால்தான் உயர் நிலைக் கல்வியை நல்ல பள்ளியில் பெறமுடியும் என்ற பதற்றம் இன்னும் பல பெற்றோர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

இப்போதைய 'டி-ஸ்கோர்' முறையில் ஒரு மாணவர் ஒரு பாடத்தில் சற்று மோசமாகச் செய்தாலும் மற்ற பாடங்களில் சிறப்பாகச் செய்வதன் மூலம் அதை ஈடு கட்டமுடியும். புதிய முறையில் அது சாத்தியம் இல்லை என்பது சில பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது.

அவர்களின் பதற்றமும் கவலையும் அவசியமற்றது. மாணவர்கள் 12 வயதில், பிஎஸ்எல்இ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் அவர்களின் எதிர்காலத்தை, வாழ்க் கைப் பாதையைத் தீர்மானிக்கும் என்று நினைப்பது அறி யாமை.

ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைவாகப் பெற்றுவிட்டால் வாய்ப்பையே, வாழ்க்கையையே இழந்துவிட்டதாகக் கருத முடியாது. மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு ஒரு மாணவரின் அறிவுத்திறனை எடைபோடுவதும் கூடாது.

தேர்வு முடிவுகளுக்குத் தரப்படும் அதீத முக்கியத் துவத்தைக் குறைத்து மாணவர்கள் தங்களை முழுமையாக வளர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகளையும் காலத்தை யும் அளிப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம். நல்ல மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், குறைகள் இல்லாத முறைகளே இல்லை என்பதையும் அவர்கள் உணரவேண்டும். புதிய முறை அமலுக்கு வர இன்னும் ஐந்தாண்டு காலம் உள்ளது. அதற்குள் அந்த முறையைச் சோதித்துப் பார்த்து அதில் குறைகள் இருப்பின் அவற்றைக் களைய அரசாங் கத்திற்கும் போதிய அவகாசம் இருக்கிறது.

மதிப்போடு வாழ நல்ல மதிப்பெண் மட்டுமே போது மானதல்ல என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கப் பணி களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது கல்வித் தகுதியையும் மதிப்பெண்களையும் தரநிலைகளையும் மட்டும் பார்க்காமல் குறித்த துறையில் ஒருவருக்கு உள்ள திறமைக்கும் தேர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

அதேபோல, எல்லா பள்ளிகளும் சிறந்த பள்ளிகளே என்ற நிலையை உருவாக்க ஆசிரியர்களும் அரசாங்கமும் பாடுபட வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகளை தங்களின் வசிப்பிடத்திற்கு அரு கில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்க எல்லா பெற்றோர்

களும் விரும்புவர். இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் கவனம் செலுத்த கூடுதல் நேரம் கிடைக்கும்.

தொடக்கக்கல்வியை முடித்து அடுத்த நிலையில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களைக் கவரும்விதமாக உயர்நிலைப் பள்ளிகளும் தங்களது தனித்துவமிக்க திட்டங்களை மெருகேற்ற வேண்டும். மாணவர்களின் ஆர்வங்களைத் தூண்டும் வகையில் பல புதிய அம்சங் களையும் அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு மாணவனை கல்வியில் சிறந்தவனாக்குவது மட்டுமல்லாமல் அவனை ஒரு முழுமையான, நற்பண்புகள் நிறைந்த மனிதனாக உருவாக்குவதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்குண்டு.

பிள்ளைகளின் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை தரும் பெற்றோர்கள், அவர்களின் மற்ற திறமைகளுக்கும் ஆர் வங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பின்னர் அவற்றை மெருகேற்ற உதவும் திட்டங்களைக் கொண்டு உள்ள பள்ளிகளில், கல்வி நிலையங்களில் அவர்களைச் சேர்த்து விட்டால் அவர்கள் வாழ்வில் வெல்வது உறுதி. தமக்குப் பிடித்ததுபோல முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தோம் என்ற மனநிறைவும் அவர்களுக்குக் கிட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!