உறவை பலமாக்கும் வேகம்

மலேசியத் தீபகற்பமும் சிங்கப்பூர் தீவும் கடல் நீரில் வழி அமைத்து கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் கரைகளை ஒன்றிணைத்தன. படகுகளை நம்பியிருந்த பயணிகள், சரக்குப் போக்குவரத்தை 1923ல் செயல்படத் தொடங்கிய 1.05 கிலோ மீட்டர் ஜோகூர் மேம்பாலம் பல மடங்கு எளிதாக்கியது. சாரை சாரையாக மக்களும் வாகனங்களும் பாலத்தைக் கடக்கத் தொடங்கினர். இருநாட்டு உறவை வலுப்படுத்திய இந்த முதல் தரைப் பாதையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் காலத் தில் சிங்கப்பூர்வாசிகளுக்கும் மலேசிய மக்களுக்கும் இடையே மேலும் அணுக்கமான பிணைப்பை அதிவேக ரயில் போக்குவரத்து ஏற்படுத்திவிடும்.

வேலைக்கும் பொழுதுபோக்கவும் பொருள் வாங்கவும் உறவினர், நண்பர்களைக் கண்டு வரவும் அன்றாட கரை கடப்பை எளிதாக்க இருக்கும் இந்த அதிவேக ரயில் போக்குவரத்து 10 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும். ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் கோலாலம்பூர் அருகேயுள்ள பண்டார் மலேசியாவுக்கும் இடையே 350 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் சேவை அமைக்கப்படவுள்ளது.

மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் 90 நிமிடங்களில் ஜூரோங்கிலிருந்து கோலாலம்பூர் செல்லலாம். சிங்கப்பூரிலிருந்து கோலாலம் பூருக்கு நேரடியான இந்த விரைவு சேவையுடன் சிங்கப்பூர் =இஸ்கந்தர் புத்ரிக்கிடையே முன்பின் சேவை, மலேசியா வின் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களுக்கிடையிலான உள்ளூர் சேவை என மூன்று விதமான சேவைகளை அதிவேக ரயில் சேவை வழங்கும்.

சென்ற செவ்வாய்க்கிழமை கையெழுத்தான அதிவேக ரயில் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் குறிப்பிட்டதைப்போல இரு நாடுகளும் எவ்வாறு ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு ஒன்றாக முன்னேறுகின்றன என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அதிவேக இணைப்பு குறித்து 1990களில் தொடங்கிய பேச்சு 2013ல் உறுதிப்படுத்தப்பட்டது. மூன்றே ஆண்டுகளில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

ஏறக்குறைய $20 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (60 பில்லியன் மலேசிய ரிங்கிட்) செலவிலான இந்தத் திட் டத்தை "இரு அரசாங்கங்களின் பிரம்மாண்டமான, நீண்ட நாள் முதலீடு," என பிரதமர் லீ சியன் லூங் வர்ணித்து உள்ளார்.

"இரு நாடுகளின் நகரங்களையும் இணைக்கும் பால மாகத் திகழும் இந்த அதிவேக ரயில் திட்டம், இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தையும் அதிகரிக் கும்," என்ற அவரது கணிப்பு மிகத் தெளிவானது. முதல் கட்டமாக இதன் கட்டுமானப் பணி இரு நாடு களிலும் வேலை வாய்ப்புகளை உண்டாக்கும். அதிவேக துறையில் நிபுணத்துவத்தைக் கொடுக்கும். அடுத்து ரயில் நிலையங்கள் அமையவுள்ள பகுதிகள் கிடுகிடு வென மேம்பாடு காணும். சொத்து மதிப்புகளும் உயரும்.

பயண நேரத்தை அதிவேக ரயில் ஒன்றரை மணி நேரமாகக் குறைத்து விடுவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான அன்றாடப் போக்குவரத்து பல மடங்கு பெருகும். சுற்றுலா, பொழுதுபோக்கு, உணவு பானம் என எல்லாத் துறைகளது தேவையும் அதிகரிப்பதால் வேலை வாய்ப்புகள் கூடும், பொருளியலும் வளர்ச்சி காணும்.

தற்போது கோலாலம்பூர் = சிங்கப்பூர் வாகன பயணத் துக்கு 5 மணி நேரம் வரையும் ரயில் பயணத்துக்கு 7=8 மணி நேரம் வரையும் ஆகிறது. போக்குவரத்து நெரிசல் இருந்தால் சாலைப் பயண நேரம் கூடும். விமானப் பயணம் ஒரு மணி நேரத்துக்கும் குறைவானதுதான் என்றாலும் விமான நிலையங்களுக்குச் செல்லும் தூரம், குடிநுழைவு, சுங்கப் பரிசோதனைகள் என்று அதற்கும் ஏறக்குறைய 4-=5 மணி நேரங்களாகிவிடும். அதிவேக ரயிலில் இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை.

மேலும் சிங்கப்பூர், கோலாலம்பூர், இஸ்கந்தர் புத்ரி என மூன்று இடங்களில் புறப்படும்போது மட்டுமே சுங்க, குடிநுழைவு, தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெறும் என்பதும் நேரத்தை அதிகம் குறைக்கும் முக்கிய அம்சம். பாதை, ரயில்கள் எல்லாமே உன்னத தரத்தில் இருந் தாலும் கட்டணம் சாதாரண மக்கள் சமாளிக்கக் கூடிய தாக இருக்க வேண்டுமே என்ற கவலையும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் மிகத் தேவையானது இந்தச் சேவை.

இந்த அதிவிரைவான சிறந்த போக்குவரத்து, தென் கிழக்கு ஆசியாவை ஒன்றுபட்டுச் செயல்படும், ஒத்த சிந்தனையுள்ள ஒரே வட்டார சமூகமாக்கி விடும் என் பதை சிங்கப்பூரும் மலேசியாவும் நிரூபிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!