தண்ணீர் அரசியல்

­­­­­­இந்­தி­யா­வின் தென்கோடியில் உள்ள தமிழகம் தனது தண்ணீர்த் தேவைக்கு அதனைச் சுற்றியுள்ள கர்­நா­டகா, கேரளா, ஆந்­தி­ரா­ மாநிலங்களில் இருந்து வரும் நதிகளை நம்­பித்­தான் இருக்கிறது. நதி நீர் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தமி­ழ­கத்­திற்­கு அண்டை மாநி­லங்கள் தண்ணீர் வழங்­க வேண்டும். ஆனால், நதி நீர் பிரச்சினை மாநி­லங்களுக்­கிடையே தீர்க்­கப்­ப­டாத பிரச்­சினை­யாக பூதா­கார­மா­கிக்கொண்டே வரு­கிறது. இதில் பெரும் பிரச்சினையாக இருப்பது காவிரி நீர்ப் பிரச்சினை.

இந்த ஆண்டு காவிரி நீர் திறந்துவிடப்படாமல் தமி­ழ­கம் நீதிமன்றத்துக்குச் சென்று, 15,000 கன அடி நீரை 10 நாட்­களுக்­கு அளிக்கு­மாறு உச்­ச­நீ­தி­மன்றம் கூறி யதைத் தொடர்ந்து கர்­நா­ட­கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

நியா­ய­மாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மூன்று மாதங் களில் தமி­ழ­கத்­துக்கு வரவேண்டிய காவிரி நீரின் அளவு 94 டி.எம்.சி. (1 டி.எம்.சி என்பது ஒரு பில்லியன் கன அடி). இதில் கால்வாசி தண்ணீர்தான் இப்போது திறந்து விடப்பட்டுள்ளது. அதற்குத்தான் போராட்டம்.

காவிரிப் பிரச்சினை பல ஆண்டு பிரச்சினை. ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும் 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்திலும் ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதைத் தடுக்கும் எதிர்காலத் திட்டத்துடன் மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையும் தமிழகத்தில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டன.

இதன் விளைவாக 1892, 1924ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 1924 ஒப்பந்தம் 1974ல் காலாவதி நிலையில், காவிரியின் துணைநதி களான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அணைகள் கட்டி காவிரி நீரை தனி உடைமையாக்கியது கர்நாடாகா. பிரச்சினையைத் தீர்க்க 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதிலும் பல பிரச்சி னைகள்.

கடைசியாக-- 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்­பின்­படி பற்­றாக்­குறை இல்லாத ஆண்­டு­களில் தமிழ்­நாட்­டுக்கு 419 டிஎம்சி, கர்­நா­ட­கா­வுக்கு 270 டிஎம்சி கேர­ளா­வுக்கு 30 டிஎம்சி, புதுச்­சே­ரிக்கு 7 டிஎம்சி என்று காவி­ரி­யில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்துகொள்­ளப்­பட வேண்டும். பற்­றாக்­குறை ஆண்­டு­களில் எவ்­வ­ளவு தண்ணீர் குறை­கிறதோ அதற்கேற்ப இதே வீதத்­தில் பகிர்ந்துகொள்­ள வேண்டும்.

ஆனால் காவி­ரி­யின் முக்­கி­ய­மான நான்கு அணை­களில் தண்ணீர் நிரம்பி வழிந்தால் மட்டுமே உபரி நீரை தமி­ழ­கத்­துக்­குத் திறந்து விடுவோம் என்று கர்­நா­ட­கம் முரண்டுபிடிப்­ப­து­தான் இப்போது முதல் பிரச்­சினை.

இரண்டா­வது பிரச்­சினை, தண்­ணீ­ரின் தேவை பல மடங்கு அதி­க­ரித்­துள்­ள­போ­தும் தமிழ்நாட்டில் நீரா­தா­ரங்கள் அதி­க­ரிக்­கப்­ப­டா­ததுடன், இருக்­கும் நீர்நிலை களும் பேணப்­ப­டா­மல் பாழ்பட்டுக் கிடப்பது. காவிரி நீரைச் சேமிக்­கப் புதிதாக 400 ஏரி, குளங்களைக் கர்­நா­டக அரசு ஏற்­படுத்தி இருக்­கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்­கும் ஆறு­களும் ஏரி­களும் மாசடை­வ­தும் தூர்க்­கப்­பட்டு குடி­யி­ருப்­பு­கள் உரு­வாக்­கப்­படு­வ­தும் அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கிறது.

இதில் தண்ணீர் பிரச்­சினை அர­சி­யல் ஆக்­கப்­படு ­வ­துதான் மேலும் வேதனை தரும் விஷயம். மக்­களின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சினையை உணர்­வு­ரீ­தி­யா­கத் தூண்டி விட்டு அதில் லாபம் சம்பா­திப்­ப­தில் மத்திய, மாநில கட்­சி­கள் குறியாக உள்ளன. எப்­போ­தெல்­லாம் காவிரி பிரச்சினை கிளம்­பு­கிறதோ அப்­போ­தெல்­லாம் கர்­நா­ட­க தமிழர்­களின் வாழ்க்கை ஆபத்­துக்­கு உள்­ளா­கிறது.

இந்தியாவின் நதிகளை தேசிய உடைமையாக்கி அவற்றை இணைத்து எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் நதிநீர் இணைப்புத் திட்டமே மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வாக அமை யும். ஆனால், அது உடனடியாகச் சாத்தியப்படாது.

இந்த நிலையில், சட்­டப்­ப­டி­யான உரிமை­களுக்­காக போரா­டு­வது ஒரு­பு­றம் என்றால் மறு­பு­றம் நீர்­நிலை­களைத் தூய்மை­யாக்­கு­வது, வீணாகக் கடலில் சேரும் ஆற்­று­நீரை­யும் மழை நீரையும் சேக­ரிக்க நீர்­நிலை­களை அமைப் ­பது, தண்ணீர் மறுபயன்பாடு, அதி­க­ள­வில் நீரை சேமிக்­கும் விவசாய வழி­முறை­களுக்கு மாறுவது போன்றவை­ தான் தமி­ழ­கத்­தின் நீண்டகால நலன்களுக்கு ஏற்றது.

நீர்­வ­ளத்தைப் பெருக்­கவும் தண்ணீர் பற்­றாக்­குறையைச் சமா­ளிக்கவும் தேவையான நட­வ­டிக்கைகளைத் தமிழகம் மேற்­கொண்டே ஆக வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!