செந்தமிழ் நாடெனில் சிங்கப்பூர் நினைவு

இந்த உலகின் விலைமதிப்பு இல்லாத செவிச்செல்வ மாகத் திகழ்கின்ற ஏழு செம்மொழிகளில் ஒன்றான செந்தமிழ் மொழியை நினைக்கையில் சிங்கப்பூர்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. உலகத் தொடர்புக்காக ஆங்கிலத்தையும் நிலம் வாழ் மொழியாக மலாய் மொழியையும், மண்டிக்கிடக்கும் கலாசாரங்கள், பழமை, பாரம்பரியங்களைக் கட்டிக்காக் கும் முயற்சியாக உலகின் செம்மொழிகளான தமிழையும் சீனத்தையும் தன் மொழி உலகின் நான்கு திசைகளாக-நான்கு அதிகாரத்துவ மொழிகளாக ஆக்கி அழகு பார்க்கும் நாடு சிங்கப்பூர். உலகில் பல பகுதிகளில் தமிழ் புழங்கினாலும் சில இடங்களில் அது அதிகார மொழியாக, ஆட்சி மொழி யாக இருந்தாலும் அந்த மொழியை, அதன் புலமையை, புழக்கத்தைப் பலதரப்பட்ட அம்சங்களிலும் நவீன ஊடகங்களிலும் முன்னெடுத்துச் செல்வதில் வழிகாட்டி யாகத் திகழ்கின்ற நாடாக சிங்கப்பூர் இருக்கிறது.

தமிழ்கூறும் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ் தமிழும் நிலைத்து இருக்க அரசாங்கத்தோடு பாடுபட்டவர்களில், பாடுபடுவோரில் சமூகத்துக்கும் தனிப்பட்டவர்களுக் கும் பல அமைப்புகளுக்கும் முக்கிய இடமுண்டு. இத்தகைய அமைப்புகளில் ஒன்றுதான் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். எழுத்தை ஆளுகின்ற இந்தக் கழகத்தினர், நாட்டை ஆளுவோருடன் சேர்ந்து இன்று நேற்றல்ல, இந்தக் கழகம் 1976ல் தொடங்கப்பட்டது முதலே தமிழுக்காகச் சமூகத்துடன் சேர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். தமிழ் மொழிப் புழக்கத்தைப் பல வழி களிலும் அதிகப்படுத்த வாய்ப்புவசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகள் எல்லாம் தலைதலைமுறையாக நிலைத்திருக்க கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் பட்டபாடுகளை, வந்த பாதையை அசைபோடவும், நிகழ்கால, எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவும் இந்தக் கழகம் அண்மையில் 40ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள். உலக அளவில் பார்க்கையில், தமிழர் என்று ஓர் இனமுண்டு, தனியே அவர்க்கென்று ஒரு குணமுண்டு என்றும் தமிழ் மொழிக்குச் சொந்தக்காரர்களான தமிழர் கள் தலைக்குத்தலை மூளை உடையவர்கள், ஒன்றில் கூட அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படமாட்டார்கள், தமிழால்கூட அவர்கள் இணைய மாட்டார்கள் என்றும் கூறப்படுவதை நாம் கேட்டதுண்டு. ஓர் அமைப்பை ஏற்படுத்த தெரிந்த தமிழர்கள், அதை அழியவிடாமல் தலைமுறை தலைமுறையாக காப்பாற்றிச் செல்வதில் கோட்டைவிட்டுவிடுவார்கள் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். நாம் பார்த்தும் இருக்கிறோம்.

ஆனால் இந்தக் கருத்தை எல்லாம் புறம்தள்ளும் வகையில் சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் போன்ற அமைப்புகள் எவ்வளவோ போராட்டங்களுக்கு இடை யிலும் தமிழையும் அதன் வளமையையும் புழக்கத்தையும் கட்டிக்காக்க ஒற்றுமையுடன் பாடுபட்டு வருவதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பெரும் பயணத்தில் கழகத்துக்கு வருங்காலத்தில் ஏராள சவால்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. காலம் மாறி வருகிறது. எழுத்தாளர்கள் பனை ஓலையில், தாளில் எழுதிய காலம் போய் கணினி யில் எழுதும் காலம் வந்துவிட்டது. இன்னும் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன, வந்துகொண்டே இருக்கின் றன. தமிழ் உட்பட எல்லாம் இன்னும் இளமையாகின்றன. புதிய சூழலுக்கு ஏற்ப தாங்களும் மாறிக்கொள்ள வேண்டும் என்பது அவசிய அவசரமானதாக ஆகிவிட் டது என்பதை எழுத்தாளர் கழகம் உட்பட இதர அமைப்பு கள் எல்லாம் புரிந்துகொண்டு இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

எழுத்தாளர் கழகத்தின் 40ஆவது விழாவில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரில் பன்னெடுங்காலத்துக்கு, இறுதிவரையில் தமிழ் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கும் என்று அறிவித்து இருக்கிறார். நினைத்தாலே இனிக் கின்ற, நெஞ்சமெல்லாம் நிறைகின்ற இந்த நிலைக்குத் தோள்கொடுக்கவேண்டிய பொறுப்பு எழுத்தாளர் கழகம் போன்ற அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் அதிகம் என்பதால் இதை உணர்ந்து அவை எல்லாம் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!