இந்தியப் பொருளியலுக்கு அதிர்ச்சி சிகிச்சை

உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்துக்கு முன் னேறிக்கொண்டு இருக்கும் இந்தியா, பெரிய பொருளியல்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு US$ 2.2 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது மில்லியன் மில்லியன்) இப்படிப்பட்ட ஒரு நாட்டில் அன்றாடம் கோடானுகோடி மக்களிடம் கோடானுகோடி பணம் புழங்குகிறது. அந்த நோட்டுகளில் 23 பில்லியன் நோட்டுகள் அதாவது 100க்கு சுமார் 85 நோட்டுகள் ரூ500 மற்றும் ரூ 1,000 நோட்டுகள். பணக்காரர்கள் முதல் யாசகம் கேட்போர் வரை யாரைப் பார்த்தாலும் எல்லார் கையிலும் இந்த மதிப்புப் பணம்தான் அதிகம் புழங்கும். இப்படி புழங்கும் பணம் எல்லாம் உண்மையானவை அல்ல. அவற்றில் சுமார் 20% அதாவது 100 நோட்டுகளில் 20 நோட்டுகள் போலியானவை.

இது ஒருபுறம் இருக்க, நாட்டு மக்களில் பணமுதலை கள் என்று சிலர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல வழியிலோ தவறான வழிகளிலோ பெரும் பணத்தைச் சம்பாதித்து அவற்றுக்கு உரிய வரியைச் செலுத்தாமல் பணத்தைப் பதுக்கி வைத்து இருக்கிறார்கள். இப்படி பதுக்கப்பட்டுள்ள நோட்டுகளில் 100க்கு 99 இத்தகைய ரூ500, ரூ1,000 நோட்டுகள். அரசியல்வாதிகள் முதல் பயங்கரவாதிகள்வரை பலரும் இப்பிரிவினரில் அடக் கம். போலி நோட்டுகள் ஒருபுறம், கள்ளப் பணம் மறு புறம் என்று மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கி இந்தியப் பொருளியல் நொந்துபோய்விட்டது. முழு விவரம் - அச்சுப் பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!