சுசுகி கிண்ண ஏமாற்றம்; தேவை நீண்டகால மாற்றம்

ஆசியான் நாடுகள் பங்கேற்கும் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றிலேயே சிங்கப்பூர் குழு போட்டியைவிட்டு வெளியேறியதற்குப் பலரும் பயிற்றுவிப்பாளர் வீ சுந்தரமூர்த்தியைப் பலிகடாவாக்கினர். அவர் தமது உத்திகளில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தியதால்தான் இந்த கதி என்பது இவர்களின் குறைகூறல்.

ஓர் ஆண்டுக்கு மட்டுமே அவரை சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமித்ததன் மூலம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அவருக்குத் தேவையில்லாத மன உளைச்சலையும் நெருக்கடியையும் கொடுத்திருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தமக்குக் கிடைத்த குறுகிய கால அவகாசத்தில், கிடைத்த ஆட்டக்காரர்களை வைத்து சிங்கப்பூர் இந்தப் போட்டியில் நிலைக்க என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்தார் சுந்தரம். அண்மையில் தி நியூ பேப்பர் நாளிதழிடம் பேசிய அவர் இதையேதான் கூறினார்.

முதல் ஆட்டத்தில் பிலிப்பீன்ஸ் அணியை எதிர்த்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும்போது முதல் பாதியிலேயே சிவப்பு ஆட்டை பெற்று 10 பேருடன் ஆட்டத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்தது. அந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வியைத் தவிர்த்ததே பெரிய விஷயம். அடுத்து பலம் பொருந்திய தாய்லாந்துக்கு எதிராக சிங்கப்பூர் அணிதான் அதிக கோல் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில்தான் தாய்லாந்து வெற்றி கோலைப் போட்டது. கடைசி ஆட்டத்தில் இருமுறை கவனம் சிதறியதால் இந்தோனீசியா விடம் சிங்கப்பூர் அதற்கான தண்டனையை அனுபவித்தது. ஒருவேளை சுந்தரத்தின் சிங்கங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தால் இந்நேரம் அவரைத் தூற்றிக் கொண்டிருக்கும் அதே நபர்கள் இன்று அவரை துதி பாடிக்கொண்டிருப்பர்.

ஆனால் பிரச்சினை சுந்தரத்திடம் இல்லை. ஆட்டக்காரர்களிடமும் இல்லை. அது நமது காற்பந்துக் கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒன்று.

விவரம் - அச்சுப் பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!