வரவுசெலவுத் திட்டம்- முன்னேற ஒரு கைகாட்டி

உங்களுக்கு வயது 40 ஆகிவிட்டதா? நீரிழிவு, ரத்தத் தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், கருப்பைப் புற்றுநோய் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உங்களிடம் $5 இருந்தாலே போதும். வயது 50ஐ தாண்டிவிட்டதா? மலக் குடல் புற்றுநோய் சோதனையையும் இதே செலவில் நீங்கள் செய்துகொள்ளலாம். முன்னோடித் தலைமுறையின ரைச் சேர்ந்தவரா? இவை எல்லாமே உங்களுக்கு இல வசம்.

'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தில் உள்ளவரா? $2 இருந்தாலே இந்தச் சோதனைகளை நீங்கள் செய்துகொள்ளலாம். 18 வயது முதல் 39 வரை வயதுள்ள சிங்கப்பூரர்களுக்கும் நீரிழிவு ஆபத்து இருக் குமானால் அதற்கான சோதனைகளுக்கு இந்தச் செலவு தான் ஆகும்.

சிங்கப்பூரில் விரைவில் 21 வயது வரை சிகரெட் முதலான புகையிலைப் பொருட்களை யாரும் வாங்க முடியாது.

சிங்கப்பூரின் ஒரே வளம் அதன் மக்கள் தொகைதான். சிங்கப்பூரர்களின் உடல்நலனைச் சிறு வயதிலிருந்தே நன்கு பேணிக் காத்து அவர்கள் நலமான வாழ்க்கை வழிகளை இளமையில் இருந்தே பின்பற்ற ஊக்கமூட்டு வதற்காக பெரும் பொருட்செலவில் அரசு அமல்படுத்தும் சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்கள் மூலம் இவை எல்லாம் மக்களுக்கு கிடைக்க உள்ளன. இதன்மூலம் நீண்டகால போக்கில் நல்ல, தாக்குப்பிடிக்கக்கூடிய, நிலையான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்வது இலக்கு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!