ஆர்கே நகர் போதிக்கும் பாடம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வசிக்கும் கோடானுகோடி மக்களுக்கு ஜனநாயகம் என்பது மனதுக்குப் பிடித்த, ரத்தத்தில் ஊறிய ஒன்று. தங்கள் உரிமைகளை, சுதந்திரத்தைக் கட்டிக்காக்க என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்க அந்த மக்கள் தயங்குவதில்லை.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை, மேலவை என்ற இரண்டு அமைப்புகளுக்கும் அதிபர், துணை அதிபர் என்ற பதவிகளுக்கும் மாநிலங்களில் சட்டமன்றங்கள் என்ற அமைப்புக்கும் முறையாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுத் தேர்தலை நடத்தி, அந்த அமைப்பு களில் மக்களின் பேராளர்களை அமரச் செய்து அதன்வழி மக்களாட்சித் தத்துவத்தை அமலாக்கி வருகிறது இந்தியா.

இந்தத் தேர்தல் பணியை ஆற்றுவதற்காகவே 'இந்தியத் தேர்தல் ஆணையம்' என்ற அரசமைப்புச் சட்ட அமைப்பு 1950ல் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தேர்தல்களை நடத்து வதற்கான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட இந்த ஆணையம், தேர்தலில் யார் போட்டியிட முடியும்? அவருக்கு என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

என்றாலும் இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும் ஒருவரை மாற்றும் அதிகாரம், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இருக்கிறது. ஆகையால் நாட்டை ஆட்சி புரிகின்ற மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து நூற்றுக்குநூறு சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிலை யில் தேர்தல் ஆணையம் இல்லை என்பது பல ஆண்டு களாவே நிலவும் கருத்து.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!