ஒத்மான் வோக் நல்லிணக்கச் சிற்பி

உலகின் தென்கிழக்கு ஆசியப் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் மலேசியா-சிங்கப்பூரை உள்ளடக்கி, பல இன மக்களுடன் இருந்த மலேசியத் தீபகற்பத்தில் மலாய்க் காரர்கள் பெரும்பான்மையினராக இருந்த ஒரு நேரத்தில், அவர்களுக்குத் தனி உரிமைகளை அளிக்கக்கூடிய ஓர் அரசமைப்புச் சட்ட ஆட்சிதான் வேண்டும் என்று முன் னணி மலாய்க் கட்சியான அம்னோ வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது.

கம்யூனிசமே தேவை என்று ஒரு தரப்பினர் சித்தாந்த அடிப்படையில் ஒன்றுசேர்ந்து செயல்பட்டனர். பல இன மக்களையும் உள்ளடக்கி, இனம், மொழி எதையும் பாராமல் எல்லாரையும் குடிமக்களாகக் கருதி, மக்கள் எல்லாருக்கும் சம உரிமையை, சமநிலையை, தகுதிக்கு முன்னுரிமையை, இன, சமய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தக்கூடிய 'மலேசியர் மலேசியா' என்ற மக்க ளாட்சி முறை தேவை என்று 1954 முதல் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடினர்.

இப்படிப் போராடிய மக்கள் செயல் கட்சிக்காரர்களுக்கு, குறிப்பாக அந்தக் கட்சியில் அங்கம் வகித்த மலாய் இனத் தலைவர்களுக்கு, 1963 முதல் 1965 வரை சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாக இருந்த கால கட்டத்தில், கொடுக்கப்பட்ட நெருக்குதல்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாடா, சமயமா என்றால் சமயம்தான் முக்கியம் என்ற அணுகுமுறையைக் கைகொள்ளுங்கள். இதற்குக் கைமா றாக பணம், பொருள் தருகிறோம், நிலம் தருகிறோம் என்றெல்லாம் மக்கள் செயல் கட்சியின் மலாய் இனத் தலைவர்களுக்கு ஆசை காட்டப்பட்டது. அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் உயிரை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றுகூட அவர்கள் மிரட்டப் பட்டனர். ஆனால் மசெகவில் இருந்த அந்தத் தலைவர்கள் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை.

அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் கடந்த திங்கட் கிழமை தமது 92வது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறைத் தலைவர்களில் ஒருவரான திரு ஒத்மான் வோக். 1965ல் மலேசியா-சிங்கப்பூர் பிரி வினை உடன்பாடு ஏற்பட்டபோது, சிங்கப்பூர் பிரிந்துவிட்டால் அடுத்த நிமிடமே மலாய்க்காரர்கள் சிறுபான்மையினராகி விடும் நிலை இருந்தபோதும் பிரிவினை உடன்பாட்டில் தயக்கமின்றி கையெழுத்திட்டவர் திரு ஒத்மான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!