சிங்கப்பூரின் வளர்ச்சி, செழிப்பு தொடர வழி

உலகில் இப்போது பல நாடுகளும் வர்த்தகத்தைச் சார்ந்து இருக்க, வர்த்தகத்துக்குத் தன் கதவை அகலமாகத் திறந்துவிட தயாராகி வருகின்றன.

அதேவேளையில் அமெரிக்காவின் நிலை எப்படி இருக் கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உலக வர்த்தகத் தில் தன்னைப்பேணித்தனத்துடன் கடும் போக்கை அமெ ரிக்கா கடைப்பிடித்தால் உலக வர்த்தகத்துக்குக் கடும் போட்டாபோட்டி ஏற்படும். அதனால் உலக நிலவரம் விரை வில் மோசமடையக்கூடிய நிலை வரலாம்.

இத்தகைய ஒரு நிலை ஏற்படாது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், உலக வர்த்தகத்தையே சார்ந்து இருக்கும் சிங்கப்பூர் நிலை என்னவாகும்? - சிங்கப்பூர் எப்படி தொடர்ந்து செழித் தோங்கி வளர முடியும்?

வழி இருக்கிறது. புதுப்புது வேலைகள் உருவாக்கப் படவேண்டும். வேலை இழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை பார்த்துத் தரப்படவேண்டும். ஊழியர்கள் காலத் துக்கு ஏற்ற புதுப்புது தேர்ச்சிகளுடன் திகழ வேண்டும். இந்த மூன்றையும் சாதித்தால் பொருளியல் முதிர்ச்சி அடைந்துவரும் சிங்கப்பூருடன் வளர்ச்சியும் செழிப்பும் தொடர்ந்துவரும் என்பது நிச்சயம்.

இவை எளிதானவை அல்ல. உலகின் பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் வேலை இன்மை விகிதம் சுமார் 2.3 விழுக்காடு என்ற அளவில் குறைவா கவே இருந்துவருகிறது. இருந்தாலும் தொழில்துறை வேக மாக உருமாறிவருவதைக் கவனித்தால் வேறு ஒரு நில வரம் தெரியவருகிறது.

தொழில்துறையில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதால் இதுநாள் வரையில் வேலை பார்த்துவந்த ஊழியர்கள் புதிய சூழலில் வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அந்தப் புதிய சூழலுக்குத் தேவைப்படும் தேர்ச்சி அவர்களிடம் இல்லாத நிலை இருக்கையில் அவர்கள் வேலையை இழந்துவிடும் ஆபத்து ஏற்படுகிறது. இங்கு இந்த இடர் அதிகமாகும் என்றுதான் தெரிகிறது. மொத்தத்தில் சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது. புதுப்புது வேலைகளை எப்படி உருவாக்குவது? புதிய வேலைகளை உருவாக்க வேண்டும் என்றால் புதிய நிறு வனங்களை, முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். இப்போதுள்ள நிறுவனங்கள் மேம்படவேண்டும். முதலாளி கள் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவேண்டும். ஊழியருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!