பொறுப்புள்ள பெற்றோரும் பொறுப்புணரும் மாணாக்கரும்

எதிர்காலத் தலைவர்களாக வளர்ந்துவரும் பிள்ளை களின் போக்கில் தொடர்ந்து பொறுப்புணர்வுமிக்க, ஆக்கபூர்வமான மாறுதல்கள் ஏற்பட பெற்றோரின் போக் கிலும் நோக்கிலும் தொலைநோக்கு இருக்கவேண்டு மென்று சொல்வார்கள். அதேவேளையில், தங்கள் பிள் ளைகளைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் அனைத்தையும் தாங்களே கவனித்துக்கொள்ளும் சில பெற்றோரும் இல்லாமல் இல்லை.

பெற்றோர் என்றால் பிள்ளைகளின் செயல்பாடுகளில் அக்கறைகொள்ளத்தான் வேண்டும். அவர்கள்தான் பிள்ளைகளின் நடப்பில், செயல்முறையில் வழிகாட்டி களாக இருக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறு செய்வது பெற்றோருடைய அடிப் படை கடமையாகும்.

அதே வேளையில், பிளவுபட்ட சில குடும்பங்களில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், நன்றாக உண்டார் களா, முறையாகப் படிக்கிறார்களா என்று எண்ணிப் பாராத, அக்கறை கொள்ளாத பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

வள்ளுவர்கூட, தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள் தத்தம் வினையான் வரும் என்றுதான் சொல்லி இருக்கிறார். பெற்றோருக்குத் தத்தம் பிள்ளைகளே அவர்களுடைய பொருட்களாகும் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருட்கள், அவரவ ருடைய வினைப்பயனால் வந்து சேரும் என்றும் அதற்குப் பொருள் சொல்வதுண்டு.

பிள்ளைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல மறந்து போகும் வீட்டுப்பாடம், மேற்கோள் நூல்கள், அல்லது தேவையான பணம், மருந்து ஆகியவற்றைப் பள்ளிக்குப் போய் கொடுத்து வரும் பழக்கம் அடிக்கடி நேர்ந்தால், பிள்ளைகளை அது சுயமாகச் செயல்படவிடாது. அவசரமான சூழ்நிலைகளில், பெற்றோருடைய நோக்கம் சரியானதுதான் என்றாலும் அதன் பின்விளைவுகள் வேறு விதமாக அமைந்துவிடவும் கூடும். தாங்கள் செய்திருக்கக்கூடாத பிழைகளுக்கும் பெற்றோரே பொறுப்பேற்பர் என்று சிறார்கள் மனக்கோட்டையை வளர்த்துக்கொள்ளக்கூடும்.

அவர்கள், தங்கள் தவறுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அப்படித்தான் அவர்கள் வளரவும் வேண்டும். இப்போது பல பாட சாலைகள், பெற்றோர்களால் மாணவர்களுக்கு மித மிஞ்சி வழங்கப்படும் பாதுகாப்புப் போக்குக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரத் தொடங்கியுள்ளன.

தங்கள் பள்ளி நுழைவாயில்களில் பிள்ளைகள் வரும் போதோ புறப்படும்போதோ, பெற்றோர் எந்த இடம் வரை வரலாம், எந்த இடத்தில் நிற்கவேண்டும் முதலிய விதிமுறைகளை அவை வகுத்துள்ளன. கல்வி நிலை யங்களின் பொறுப்புகளையும் அவை வரையறுத்துள்ளன. மாணவர்கள் உற்பத்தித்திறன் மிக்கவர்களாக உரு வாக்கப்பட வேண்டும். சில பள்ளிகளில் மருந்துகள், கண்ணாடிகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தையும் பள்ளிகள் வைத்து உள்ளன.

அவ்வகைப் பள்ளிகளின் குறிக்கோளும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் வீடுகளின் விரிவாக் கம் அல்ல என்பதையும் அவ்வாறு பெற்றோர் நினைத் தால் அது சமூகத்தின் நேரத்தை விரயமாக்கிவிடும் என்றும் அவை தெரிவித்துள்ளன. பொறுப்புள்ள குடிமக் களாக மாணவர்களை உருவாக்க, நாடு நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களும் செயல்பாடுகளும் வீணாகி விடக்கூடாது என்றும் அந்தப் பாடசாலைகள் கூறுகின் றன.

பெற்றோர், பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல்களை நன்கு உணர்ந்து அவற்றின் விதிமுறைகளை மதித்து மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும். வருங்கால பலமுனை பொருளாதார வளத்துக்கு ஏற்ப, இன்றைய மாணவர்கள் பொறுப்புணர்வுடன் துணிந்து செயல்படவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நன்னோக்கமும் அயரா முயற்சியும் கொண் டவர்களாக உருவாக்கம் பெறுவதற்குப் பெரும் பங்காற்ற வேண்டும் என்றே சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக் கின்றது. பிள்ளைகளை எதற்கும் மற்றவரை எதிர்பார்க் கும் போக்கினராக ஆக்கிவிடாமல் அயரா முயற்சி உடையவர்களாக உருவாக்கும் வகையில் பங்காற்ற வேண்டுமென்றே நாடு விரும்புகிறது. பண்பு நலன்களை உருவாக்கிக்கொள்வதில் மாணவர்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளவும் வீடும் நாடும் உதவிக்கரம் நீட்டவேண்டும். அதுவே அனைத்து சாராருக்கும் பயன்தரமுடியும் என்பது திண்ணம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon