விடைபெறுகிறது 2017

இன்றோடு முடிவடைகிறது 2017ஆம் ஆண்டு. உள்ளூரி லும் உலகளவிலும் பல படிப்பினைகளையும் அனுபவங் களையும் போதிக்கக்கூடிய பற்பல சம்பவங்களை இந்த ஆண்டில் நாம் கண்டோம்.

சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்காக முதன்முதலாக தேர்தல் நடந்ததும் அதன்மூலம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மலாய்க்காரர் ஒருவரை அதிபர் பதவியில் நாடு கண்டதும் இந்த ஆண்டில்தான். எம்ஆர்டி வழித்தடத்தில் முதன் முதலாக வெள்ளம் ஏற்பட்டதும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி சுமார் 35 பேர் காயம் அடைந்ததும் 2017ல்தான்.

உலகளவில் பார்க்கையில், அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது, வடகொரியாவின் அணு வாயுத ஏவுகணை மிரட்டல், கணினிகளில் பாதிப்பை ஏற் படுத்திய 'வானகிரை' வைரஸ் தாக்குதல், சீனாவின் பெருந்தலைவராக அதிபர் ஸி ஜின்பிங் உயர்வு, மத்திய கிழக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சி, உலகப் பொருளியல் எழுச்சி, மியன்மாரின் ரோஹிங்கியா அகதி கள் பிரச்சினை, பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற பலவற்றையும் உலகம் 2017ல் கண்டது.

இந்தியாவைப் பார்க்கையில், அந்த நாட்டை ஆளும் பாஜக அரசாங்கம் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக 19 மாநிலங்களில் அரசியல் ரீதியில் வெற்றிபெற்று கைப்பற்றியதும் நிலையான அரசாங்கம் ஏற் பட்டதன் விளைவாக ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரி நடப்புக்கு வந்ததும் 2017ல்தான்.

சிங்கப்பூரை பொறுத்தவரையில், பொருளியல் நம்பிக் கையை ஏற்படுத்திவிட்டு இந்த ஆண்டு விடைபெறுகிறது. 2017ல் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக வளர்ச் சிக் கணிப்பு அளவை அரசாங்கம் 3.5 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இருந்தாலும் 2017ல் பல சங்கடமான சூழ்நிலைகளை நம் நாடும் அரசும் மக்களும் எதிர்நோக்கினார்கள். அனைத்து ஆசியப் பசிபிக் தாராள வர்த்தக உடன்பாடு, உலகம் வெப்பம் அடைவதைத் தடுப்பது போன்ற உலகின் மிக முக்கியமான அம்சங்களில் இதுநாள்வரை தலைமைத் துவ நிலையில் இருந்து வந்த அமெரிக்கா, அதிபர் டிரம்ப் தலைமையில் அந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது 2017ல்தான். இதன் காரணமாக சிங்கப்பூர் உட்பட ஆசிய பசிபிக் வட்டார நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து தாங்களே வேறு வகை வர்த்தக உடன்பாடு களைக் காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தென்சீனக் கடல் விவகாரம், வடகொரிய மிரட்டல் காரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி, அவற்றின் விளைவாக இந்த வட்டார சக்தி சமநிலையில் மாற்றம் எற்படக்கூடிய சூழல் உருவாகும் பட்சத்தில், தான் எப்படி நடந்துகொள்ளும் என்பதை அருமையான முறையில் தன் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் விளக்கி இரு நாடுகளோடும் நல் உறவை சிங்கப்பூர் மறுஉறுதிப்படுத்தியது.

இந்த வட்டாரத்திலும் அமெரிக்காவிலும் இயற்கைப் பேரிடர்களின்போது உதவிக்கரம் நீட்டியது முதல் மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தைத் துடைத்தொழிப்பதில் ஈடுபட் டது, கரிம அளவைக் குறைத்து இயற்கையைப் பாதுகாப்பது வரை சிங்கப்பூர் தொடர்ந்து தன் அனைத்துலகக் கடப்பாடு களை 2017ல் செவ்வனே நிறைவேற்றி உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட உலக நாடுகளுடன் சிங்கப்பூரின் நல்லுறவு 2017ல் வலுப்பட்டுள்ளது.

இருந்தாலும் இன்றுடன் முடிவடையும் ஆண்டு சிங்கப் பூருக்கு பல பாடங்களைப் போதிக்காமல் போகவில்லை. உற்பத்தித்திறன், போட்டித்திறன் பெருகவேண்டும்; மின்னிலக்க முறைக்கு, தானியக்கமுறைக்கு மாறவேண் டும்; மூப்படையும் மக்கள் தொகைக்குத் தீர்வுகாண வேண் டும்; சமய நல்லிணக்கத்தில் தொடர் கவனம் தேவை; மத்திய கிழக்கில் 'ஐஎஸ்' அமைப்பு ஒடுங்கினாலும் பயங் கரவாதம் இன்னமும் இடம்பெறும், பயங்கரவாத மிரட்ட லுக்கு சிங்கப்பூர் ஆளாகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது போன்ற பலவற்றையும் 2017 நமக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போகிறது.

அதேவேளையில், 2018 எனும் புதிய ஆண்டு பொரு ளியல் ரீதியிலும் இதர பலவற்றிலும் நன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்பதற்கான அறி குறிகள் தெரியவந்துள்ளன. 2017 கற்றுக்கொடுத்த பாடங் களைச் சரிவர மனதில் கொண்டு, ஒற்றுமையாக செயல்பட உறுதிபூண்டு புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!