சட்டம், ஒழுங்கைச் சீரழிக்கும் சிலை உடைப்பு அரசியல்

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிலை களுக்கு மனிதர்களைவிட அதிக மதிப்பு, மரி யாதை, அந்தஸ்து எல்லாம் உண்டு. திராவிடர் கள் அதிகம் வாழ்கின்ற பகுதி என்று வரலாறு எடுத்துக்காட்டும் தமிழ்நாட்டில், 'நடுகல்' என்ற ஒரு வழக்கம் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது.

கடவுள், கிராமிய தெய்வங்கள், கோயில்கள் முதல், கோட்பாட்டுச் சிற்பிகள், சமய, சமூக, அரசியல் தலைவர்கள், நன்னெறியாளர்கள், பலதுறை விற்பன்னர்கள் வரை பலருக்கும் சிலை வடித்து அழகு பார்க்கும் அந்த மாநிலத் தில், கவனிக்கப்பட்டும் கவனிக்கப்படாமலும் ஆங்காங்கே சிலைகள் நின்றாலும், அந்த மாநில மக்களைப் பொறுத்தவரை அவை வெறும் சிலைகள் மட்டும் அல்ல. பலரின் உள்ளம், உணர்வுடன் பிரிக்க முடி யாத வகையில் ஒன்றுகலந்தவையாக அங்கே சிலைகள் திகழ்கின்றன.

இப்படிப்பட்ட அந்த மாநிலத்தில், சிலைகள் உடைக்கப்பட்டதும் உடைக்கப்படுவதும் உண்டு. ஆனால் அத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் சாதிகளுக்கு இடைப்பட்ட மோதல் களில் அல்லது சாதிகளே கூடாது என்ற கோட் பாடுகளை முன்வைத்து நடத்தப்பட்டவையாக, அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பேரில் நடந்தவையாகத்தான் இருந்துவந்து உள்ளன.

தமிழகம் இப்படி இருக்க, நாட்டின் வட கிழக்கு திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகாலமாகத் தங்களை ஆண்டுவந்த கம்யூனிச கட்சியை வேண்டாம் என ஒதுக்கி விட்டு, பதிலாக பாரதிய ஜனதா கட்சியை அந்த மாநில மக்கள் தேர்ந்து எடுத்ததை அடுத்து, கம்யூனிச சித்தாந்தவாதியான லெனின் இனி தேவையில்லை என்று கருதிய சிலர், அவரின் சிலையை அங்கே உடைத்துத் தள்ளிவிட்டனர். முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!