குடியிருப்புப் பேட்டைகள் பற்றிய தொலைநோக்கு சிந்தனை

மக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கால அடிப்படையில் சிந்தித்து அவற்றுக்கேற்றாற்போல் நீண்டகாலத் திட்டங் களைத் திறம்பட வகுக்கும் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

இந்த ஆளுமைத் திறனை தமது தேசிய தினப் பேரணி உரையில் கடந்த ஞாயிறன்று நினைவுகூர்ந்த பிரதமர் லீ சியன் லூங், முக்கிய கருத்து ஒன்றையும் வெளியிட்டார். ஒரு நாட்டின் குடிமக்களையும் அதன் தலைவர்களையும் அன்றாடம் ஏற்படக்கூடிய சவால்கள், கவலைகள் ஆட்கொள்ளும் அதே நேரத்தில், சிங்கப்பூரர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்றார்.

போர்-அமைதி, இடையூறு-தொய்வில்லாத தொடர்ச்சி, தொழில்நுட்பம்-கலாசார மீள் திறன் போன்றவை ஒரு நாட்டிற்கு ஏற்படக் கூடிய தீர்வுகளை முடிவு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், திட்டங்கள் தீட்டப்படுவது, அவை முறைப்படி செயல்படுத்தப்படுவது போன்றவையும் நடைபெற வேண்டும். இந்த உணர்வின் அடிப்படையில்தான் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர் கள் நன்கு வாழ்வதற்கு ஏற்ற எதிர்காலத்தை வழங்க அரசாங்கமும் மக்களும் ஒன் றிணைந்து பணியாற்ற வேண்டிய பல்வேறு நிலைகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார்.

வாழ்க்கைச் செலவினம், பொருளியல் உருமாற்றம், இவற்றுடன் சவாலான வெளிநாட்டு சூழலையும் சரியாக சமாளிக்க வேண்டிய தேவை என இவை அனைத்தும் சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன. எனினும், பொது வீடமைப்பே மக்கள் சிந்தனையில் பிரதானமாக குடி கொண்டுள்ளது. குறிப்பாக, நாட்பட்ட வீடு களின் எஞ்சிய குத்தகைக் காலம் மக்களி டையே கவலையைத் தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே தங்கள் வீடுகளின் குத்தகைக் காலம் முடிந்தவுடன் குடியிருப்பு பற்றி தங்களுக்கு இருக்கக்கூடிய விருப்புரிமைகள் என்ன என்பது பற்றியும் அவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

தேர்ந் தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தை அனைத்து வீடமைப்புக் குடியிருப்பு களுக்கும் நீட்டிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அந்தத் திட்டமே உயர் மறுமேம்பாட்டு மதிப்புடன் விளங்கும் தேர்ந் தெடுக்கப்பட்ட, குறிப்பிட்ட குடியிருப்பு களுக்கு என உருவாக்கப்பட்ட ஒன்று. இந்தத் திட்டத்தில் சுமார் 5% வீடுகளே தேர்வுபெறும்.

வீடமைப்பு வளர்ச்சி என்பது நீண்டகால தேசிய திட்டம் என்று விளக்கிய பிரதமர், இந்தத் திட்டத்தில் குடிமக்கள் உதவியேதும் இன்றி தவிக்கவிடப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார்.

இந்த உறுதிமொழி இரு வழிகளில் செயல்படுத்தப்படும். முதலாவதாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் அதன் 99 ஆண்டு குத்தகைக் காலத்தில் இரண்டு முறை மேம்படுத்தப்படும். இதன்மூலம் வீடுகளின் குத்தகைக் காலம் குறையும்போதும் அவற்றுக்கான மதிப்பு குறையாது. இது மக்களுக்கு இருக்கக்கூடிய முக்கிய கவலையைப் போக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!