சோதனைத் தேர்வுகளும் முழு தேர்வுகளும்-சரியான சமநிலையை எட்டுதல்

இந்திராணி ராஜா

சிங்கப்பூரில் பள்ளிக்கூட அடிப்படையி லான மதிப்பீடுகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மை யில் அறிவித்தது. குறிப்பாக தொடக்கப் பள்ளி 2ஆம் வகுப்புக்கு உரிய ஆண்டு இறுதித் தேர்வும் தொடக்கப்பள்ளி 3 மற்றும் 5ஆம் வகுப்புக்கான, உயர்நிலை 1 மற்றும் 3ஆம் வகுப்புக்கான இடை யாண்டுத் தேர்வும் நடத்தப்படமாட்டா.

இந்த ஏற்பாடு, 2019 முதல் 2021 வரைப்பட்ட காலத்தில் கட்டம் கட்டமாக நடப்புக்கு வரும். பள்ளிக்கூடங்கள் ஒரு பள்ளிப் பருவத்திற்கு ஒரு பாடத்திற்கு மட்டுமே மதிப்பீட்டைச் செய்யும். மதிப்பெண் புத்தகங்கள், இனிமேல் மாணவர்களின் வகுப்பு நிலையையும் பிரதிபலிக்காது. மொத்தத்தில் இந்த நடவடிக்கைகளுக்கான ஆதரவு ஆக்க கரமானதாக இருக்கிறது.

நம்முடைய கல்வி முறை அளவுக்கு அதிக மனஉளைச்சல் தருவதாக இருக் கிறது என்று கவலை தெரிவித்துவந்த வர்கள், இந்த அறிவிப்புகளை வரவேற்று இருக்கிறார்கள்.

இருந்தாலும் இதில் நாம் போதிய அளவுக்கு இன்னமும் செய்யவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். தொடக் கப்பள்ளி இறுதித் தேர்வு உட்பட எல்லா தேர்வுகளையும் அகற்றவேண்டும் என்று இவர்கள் குரல் கொடுக்கிறார்கள். மாறாக, சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் நாம் அளவுக்கு அதிகமாகப் போய்விட்டோம் என்று கவலைப்படுகிறார்கள்.

அநேகமாக இப்போது அதிக கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு நிலைக்கு நாம் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். புதிய நடவடிக்கைகள் காரணமாக பள்ளிக்கூடங்களில் தங்கள் பிள்ளைகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்று சில பெற்றோர் கவலைப்படுகிறார்கள்.

வெவ்வேறான இந்தக் கருத்துகளை வைத்து பார்க்கையில் கல்வி அமைச்சின் பணி எந்த அளவுக்குச் சவால்மிக்கது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆயினும் இந்த நடவடிக்கைகளை நடப்புக்கு கொண்டுவருவதில் கல்வி அமைச்சின் இலக்குகள் என்ன? ஏன் இதனை நாம் செய்கிறோம்? என்பவற்றை எல்லாம் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியமானது.

இனிமேல் மாணவரின் தரநிலையும் கல்விச் சாதனையும் முக்கியமானவை அல்ல என்று அண்மைய மாற்றங் களுக்குப் பிறகு மக்கள் பொதுவாக கூறுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இது உண்மை அல்ல.

மாணவர்களின் கல்வித் தரநிலை அல்லது ஏட்டுக்கல்வி முக்கியமான ஒன்றல்ல என்று கல்வி அமைச்சு கூற வில்லை. அதேவேளையில், தரநிலை களுக்கும் கல்விச் சாதனைகளுக்கும் அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடாது என்றுதான் கல்வி அமைச்சு கூறுகிறது. மேலும்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!