மகாத்மா காந்தி=மானிட குலத்துக்கே வழிகாட்டி

இந்த உலகம், கடந்த 20வது நூற்றாண்டில் எதிரும் புதிருமான, மிக முக்கியமான இரு வரலாறுகளை விட்டுச்சென்று இருக்கிறது. அவற்றில் ஒன்று வன்செயல் வெறியாட்டம். மற்றொன்று அமைதிப் போராட்டம். ஜெர்மனியின் ஹிட்லர் துப்பாக்கியைத் தூக்கி, பல நாடுகளையும் நசுக்கி, யூதர்களை ஒழித்து ரத்தக்களரியை அரங்கேற்றியதன் விளைவாக இந்த உலகம் பயங்கர பேரழிவுப் போரைத்தான் சந்தித்தது.

அதே காலகட்டத்தில், இந்தியாவில் அமைதி, அகிம்சை, சத்தியத்தை மகாத்மா காந்தி கையில் எடுத்ததால் காலனித்துவம் ஒழிந்து ஒரு புதிய சுதந்திர உலகமே உதய மாகியது. இந்த இருவேறு வரலாறுகளையும் கண்ட உலகம், இன்று காந்தியை போற்று கிறது. ஹிட்லரை தூற்றுகிறது.

காந்தியை மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் இந்தியா கொண்டாடுகிறது. அனைத்துலக அகிம்சை தினமாக காந்தி பிறந்த நாளை உலகம் அனுசரிக்கிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா வின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்ற நகரில் 1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். லண்டனில் சட்டம் படித்தார்.

தென்ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராக தொழில் நடத்தினார். அங்கு இந்திய சமூகத் தினரின் உரிமைப் போராட்டங்களில் பங் கெடுத்து அகிம்சை மூலம் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். சிறைத் தண் டனையையும் அவமானங்களையும் எதிர் கொண்டார். 1915ல் இந்தியா திரும்பியதும், 250 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திற்கு வெற்றி கரமான முறையில் தலைமை வகித்தார்.

அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். 33 ஆண்டுகள் போராடி கடைசியில் இந்தியா வுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்தார். மனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற் காகவும் மகாத்மா காந்தி நடத்திய அகிம்சை போராட்டம் உலகம் முழுவதும் உந்துசக்தி யாகத் திகழ்ந்து, அதன் காரணமாக உலகில் காலனித்துவ ஆட்சி முறை அகன்று இந்தியா வைப் பின்பற்றி பல சுதந்திர நாடுகள் பரிணமித்தன. மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்வும் அவரின் அரசியலும் அன்பு, சத்தியம், சமத்துவம் என்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

எந்தவித அதிகார பலமும் இல்லாமல் மக்களின் ஆதரவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அகிம்சை வழியில் சத்தியத்தைக் கடைப்பிடித்து எளிமையான முறையில் அர சியல் நடத்திய மகாத்மா, தீண்டாமை ஒழிப்பை அதைவிட அதிக முக்கியமாகக் கருதினார்.

பன்மய, பல கலாசார, பல மொழி, நல் லிணக்கமிக்க, சமத் துவமான, சுதந்திர இந்தி யாவே மகாத்மாவின் இலக்கு.

உலகில் பல சுதந்திர நாடுகள் பரிணமிக்க மகாத்மா காந்தி அகிம்சை வழி காட்டியது ஒருபுறம் இருக்க, மானிட இனத்திற்கு மகாத்மாவின் பங்களிப்புகள் இன்றைய உல கிற்கும் மிக முக்கியமானவையாக, அவசிய மானவையாக இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!