முரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்

சுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பல வழி கள் இருக்கின்றன. தெற்கு ஆசிய நாடான இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் கடலோர மாநிலங் களில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள், மற்ற பல நாடுகளில் பல பகுதிகளுடன் ஒப் பிடுகையில் குறைவுதான்.

இருந்தாலும் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்த நாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்கள், புயல், பேய்மழை போன்ற இயற்கை பேரிடர் களால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக தமிழ்நாடு, இந்தியாவின் கிழக்குப் பக்கம் இருக்கும் கடலோர மாநிலம் என்பதால்=நிலநடுக்கப் பேரிடருக்குப் பெயர் பெற்ற இந்தோனீசியாவின் சுமத்ரா பகுதிக்கு மேற்கே இருப்பதால் அங்கு ஏற்படக்கூடிய பேரிடர்களில் தமிழ்நாடு சிக்கிக்கொள்வதற் கான வாய்ப்புகள் பூகோள ரீதியில் அதிகம். பூம்புகார் கடலுக்குள் சென்றது முதல் 2004 சுனாமி வரை தமிழகம் பல பேரிடர் களைச் சந்தித்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் 2005 முதல் 2018 வரை மொத்தம் 11 புயல்கள் மாநிலத்தை பதம்பார்த்து இருக்கின்றன. நிஷா, தானே, நீலம், நாடா, வர்தா, ஒகி போன்றவை அவற்றில் சில.

இருந்தாலும் இந்த மாதம் 16ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வேதாரண்யம், நாகப் பட்டினம் பகுதிகளைப் புரட்டிப்போட்ட கஜா புயல் பலவகைகளிலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. 2004ல் சுனாமி, 2015ல் சென்னை வெள்ளம் ஆகியவற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கஜாதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் பேரிடர் என்று வர்ணிக் கப்படுகிறது.

இந்தியாவின் உள்துறை அமைச்சு, 'தேசிய புயல் இடர் துடைப்புத் திட்டம்' என்ற ஒரு திட்டத்தைப் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

அந்தத் திட்டத்துடன் தமிழ் நாட்டின் 'மாநில பேரிடர் சமாளிப்பு ஆணையமும்' மேற்கொண்ட சிறப்புமிக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் கடந்து கஜா ஏறக்குறைய 63 பேரைக் கொன்றுவிட்டது என்பதை வைத்தே அதன் கொடுமை எப்படி என்பதைக் கணித்துவிடலாம்.

ஏராளமான கால்நடைகள் மடிந்தது ஒரு பக்கம், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் பாழ்பட்டு கிடப்பது மறுபக்கம் என்றால் நாகை, வேதாரண்யத்தை சுற்றி உள்ள கிராமங் களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களில் தங்கி இருக்கி றார்கள். மின்சாரம் இல்லாமல் தவிப்பவர்களும் கணிசம்.

உள்கட்டமைப்பு வசதிகள், சொத்து சேதம், பயிர் சேதம் எல்லாவற்றையும் சமாளிக்க மாநில அரசாங்கம் 15,000 கோடி ரூபாயை மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுள்ளது. மத்திய அரசாங்கக் குழு நேற்று முதல் சேதத்தை பார்வையிட்டு வருகிறது. கஜா புயல் வரப்போகிறது என்பது தெரிந்த உட னேயே அதைச் சமாளிக்க மாநில அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லா தரப்புகளும் பாராட்டுகின்றன.

ஆனால் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சமாளித்து நிலைமையை வழக்கத்திற்குக் கொண்டுவருவதில் அரசாங்கத்தின் வேகம் போதாது என்பதையே ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாநில அரசும் மத்திய அரசும் நிவாரண நடவடிக்கைகளில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இன்றைய தேவை. இயற்கைப் பேரிடர்கள் இயல்புதான் என்ற நிலை நிரந்தரமாக இருக்கும் தமிழ்நாட்டில், இவ்வளவு காலம் ஆகியும், பேரிடர்களை சமாளிக்க நிரந்தரமான உள்கட்மைப்பு வசதி கள் இல்லாமல் இருப்பது மிகவும் கவலை தருவதாகவே இருக்கிறது.

கடலோரங்களில் பேரிடர்களால் பாதிக்கப் படாத வீடுகள், நிவாரண முகாம்கள், உடனடி மருத்துவ, போக்குவரத்து வசதிகளை நிரந் தரமாக உருவாக்கி பேரிடர் சமாளிப்பு உள் கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்தவேண் டும். இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து குறி வைத்துள்ள ஒரு நிலப்பகுதி தமிழ்நாடு என் பதை மனதில்கொண்டு நிர்வாகங்கள் செயல் பட வேண்டும் என்பதே கஜா போதிக்கும் தெள்ளத்தெளிவான பாடம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!