வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தேவை பாதுகாப்பு

நிலப்பரப்பில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் பெரும்பெரும் நாடுகள் பலவும் செய்ய இயலாத சாதனையைப் பல்லாண்டு காலமாக சிங்கப்பூர் நிகழ்த்திவருகிறது.

பெரிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த ஏராள மக்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பொருளியலுக்கு வெளி நாட்டினரின் ஆற்றல் தேவை, அதை தவிர்க்க இயலாது என்பதால் அவரவர் தேர்ச்சி, ஆற்றல்களுக்கு ஏற்ப உடலுழைப்பு ஊழியர் முதல் வீட்டுப் பணிப்பெண், ஆற்றல்மிக்க வல்லுநர் வரை பலவகை அனுமதிகளின் பேரில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் இங்கு வேலை பார்க்கிறார்கள்.

வெளிநாட்டினரில் பலரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பணம் ஈட்ட ஏழ்மை நாடுகளில் இருந்து இங்கு வருகிறார்கள்.

அத்தகைய ஊழியர்களின் கடும் உழைப்பை அங்கீகரித்து, சட்டப்படி அவர் களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டி, அவர்களைக் கூடுமானவரை மகிழ்ச்சியாக வைத்து, அவர்களுக்குத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொடுத்து, உற்பத்தித்திறன் உயர வகைசெய்து, ஆற்றல் மிக்கவர்களைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் நாடுகளில் சிங்கப்பூர் முதல் வரிசையில் இருக்கிறது.

அரசாங்கம் ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவதற்காகவே 'வெளி நாட்டு ஊழியர் நிலையம்' போன்ற அமைப்பு கள் இங்கு செயல்படுகின்றன.

பொருளியல் தேவைக்கும் ஊழியர்கள் தேவைக்கும் இடையில் சமநிலையைக் கட்டிக் காக்க முயலும் ஓர் ஏற்பாட்டின் கீழ், ஊழியர் களுக்கு அவர்கள் வெளிநாட்டினரோ உள் நாட்டினரோ எப்படி இருந்தாலும் ஒரே மாதிரி யான, பரந்த அளவிலான பாதுகாப்பு தேவை என்பது அடிப்படை கோட்பாடு. இந்தக் கோட்பாடு எல்லாருக்கும் பொது என்றாலும் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தி இருக்கும் நிறுவனங் களில் சில, அனைத்துலக அளவிலும் உள் நாட்டிலும் எழுகின்ற தொழில் சவால்களைச் சமாளிக்க முயலும்போது, குறிப்பாக இத் தகைய ஊழியர்களின் உரிமைகளை, நலன் களை உறுதிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் சில முதலாளிகள் தங் களிடம் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழி யர்களைச் சரிவர நடத்தாமல் கடமைகளில் இருந்து தவறிவிடுகிறார்கள்.

தங்கள் வேலை நிபந்தனை நிலவரங்கள் பற்றி வெளியே தெரிவித்தால் வேலை போய் விடும் என்ற அச்சத்தில் வெளிநாட்டு ஊழி யர்களும் செய்வதறியாது மவுனமாக இருந்து விடுவதுண்டு. இத்தகைய ஊழியர்களில் சிலருக்கு ஊதியம்கூட சரிவர கிடைப்ப தில்லை. வெளிநாட்டு ஊழியர் மையத்தின் உதவியை இந்த ஆண்டு நாடிய வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப் பதில் இருந்து இது தெரிய வருகிறது.

அத்தகைய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு $500,000க்கும் அதிக நிதி உதவி கிடைத் துள்ளது. இது ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் அதே வேளையில் கவலையாகவும் உள்ளது.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் போன்ற அமைப்புகள் இத்தகைய ஊழியர்களுக்குச் சட்டப்படி உள்ள உரிமைகளை அவர்களிடம் இன்னும் மும்முரமாக தொடர்ந்து எடுத்துச் சொல்லிவரவேண்டும். அதேவேளையில் பிரச் சினை என்று வரும்போது அதை வளரவிடாமல் இத்தகைய ஊழியர்களும் முன்னதாகவே செயல்பட வேண்டியதும் முக்கியமானது.

இது ஒருபுறம் இருக்க, வெளிநாடுகளில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களைத் தரு வித்துத் தருவதாக இணையத்தில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் கண்ணியத்தைக் கட்டிக்காக்கவேண்டியதும் அவசியமானது.

சிங்கப்பூரர்கள் உழைப்பை மிகமுக்கிய மாகக் கருதுபவர்கள். இன்றைய சிங்கப்பூரர் களில் பெரும்பாலானவர்களின் மூதாதையர் கள் இங்கு வந்தபோது உழைப்பே அவர்களின் பிழைப்பின் மூலதனமாக இருந்தது.

கடுமையாக பாடுபட்டு நாட்டை உருவாக் கினார்கள். தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார் கள். இதில் சிங்கப்பூரர்களுக்கு உறுதுணை யாக இருந்து வெளிநாட்டு ஊழியர்கள் பாடு படுகிறார்கள்.

யார் உழைத்தாலும் உழைப்பு உழைப்புதான் என்பதால் அதற்கு உரிய அங்கீகாரம், வெகுமதி கிடைக்கவேண்டும். அப்போதுதான் உழைப்பு உயர்வு தரும். உற்பத்தித்திறன் உயரும் என்பது முதலாளிகள் ஊழியர்களுக் குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!