இருநூறாவது ஆண்டு நிறைவு - சிங்கப்பூர் மக்களின் பயணம்

இந்திராணி ராஜா

இந்த ஆண்டு நாம் நமது இருநூறா வது ஆண்டு நிறைவை அடைந்துள் ளோம். அதாவது சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் நவீன சிங்கப்பூரைக் கண்டுபிடித்து 200 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருநூறாவது ஆண்டு நிறைவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நாம் நமது வரலாற்றின் பின்னணியை முதலில் தெரிந்திருக்க வேண்டும். நமது வரலாறு 1819ஆம் ஆண்டில் தொடங்கியது அல்ல. அது 700 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது மன்னர் சங் நீல உத்தமா, இந்த வட்டார வர்த்தகத்துக்கு இத்தீவு முக் கிய கடற்துறை மையமாக விளங்கும் என்று தீர்மானித்தது முதலே தொடங்கி விட்டது.

அப்போதிலிருந்தே வர்த்தகம்தான் நமது உயிர்நாடி. உலகின் பல இடங்க ளிலிருந்து வர்த்தகம் புரிய இங்கு வந் தனர். உதாரணத்துக்கு, சீன மன்னர் தனது போருக்குப் பயன்படுத்தும் யானைகளை சிங்கப்பூரில்தான் வாங்கி னார். சிறிய நாடாக இருந்ததால், அப்போ தைய சிங்கப்பூர் அடிமைத்தனத்தாலும் வெளிப்புறத் தாக்குதல்களாலும் பாதிக் கப்பட்டது. முதல் 500 ஆண்டுகளில் இரு உச்ச வளப்பத்தை அடைந்த சிங்கப்பூர் பின்னர் சரிவைச் சந்தித்தது.

1819ல் ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கியதும் இந்த நிலைமை மாறியது. இது சிங்கப்பூரைப் புதிய, மேல்நோக்கிச் செல்லும் நிலைக்கு இட் டுச் சென்றது. முதலில் குடியேற்றமாக உருவெ டுத்த சிங்கப்பூர் பின்னர் வளர்ச்சி, செழிப்பால், காலனியாக மாறியது. அதன்பின்னர் சுயநிர்ணயத்துடன் செயல்படத் தொடங்கியது. உள்நாட்டு சுய அரசாங்கத்திலிருந்து (1959), மலே சியாவுடன் இணைந்து (1963), சுதந்திர நாடாக (1965) சிங்கப்பூர் நிமிர்ந்து நின் றது. ஆனால், சிங்கப்பூரின் வரலாறு அரசி யல் மேம்பாடுகளை மட்டும் சார்ந்தது அல்ல. அதில் நம் மக்களின் கதைகளும் அடங்கி உள்ளன. சிங்கப்பூர் இந்தியர் களின் கதையும் அதில் உள்ளடக்கப்பட்டுள் ளது.

ராஃபிள்ஸ் தனது ‘இந்தியானா’ கப்ப லில் சிங்கப்பூருக்கு வந்தபோது, அவரு டன் பிரிட்ஷ் காலனித்துவச் சேவையின் ஊழியரான திரு நாராயண பிள்ளை என்ற தமிழரும் வந்தார். சிங்கப்பூர் பற்றி ராஃபிள்ஸ் கொண் டிருந்த தொலைநோக்கால் கவரப்பட்ட திரு பிள்ளை, தனது வேரை இங்கு பதிக்க முடிவு செய்தார். முதலில் காலனித் துவக் கருவூலத்தில் தலைமை அலுவலரா கப் பணியாற்றிய அவர், பின்னர் தனியார் துறையில் சேர்ந்து, சிங்கப்பூரின் முதலா வது இந்திய செங்கல் வர்த்தக உரிமை யாளராகவும் குத்தகையாளராகவும் பரிண மித்தார். முதலாவது இந்திய சமூகத் தலைவராக வும் வளர்ந்த திரு பிள்ளை, சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலை நிறுவினார். மேம்பட்ட வாழ்க்கையை நாடி சிங்கப் பூருக்கு வந்த இந்தியர்கள் பலரில் திரு நாராயண பிள்ளையும் ஒருவர். முதலில் சிறிய குழுக்களாக இந்தியர்கள் இருந்த னர். பின்னர் வர்த்தகர்களாக, வியாபாரி களாக இந்தியர்கள் முன்னேறினர்.

1800ன் பிற்பகுதியில் இந்தியர்கள் பலர் வேலைக்காகவும் வர்த்தகத்துக்காக வும் சிங்கப்பூரில் குடிபெயர்ந்தனர். அவர் களில் தமிழர்கள், பார்சி இனத்தவர்கள், வங்காளிகள், சிந்தியர்கள், செட்டியார்கள் போன்றோர் அடங்குவார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு 16,000 இந்தியர்கள் அதாவது அப் போதைய மக்கள் தொகையில் 9 விழுக் காட்டினர் வசித்து வந்தனர். இன்றும் கிட்டத்தட்ட அதே விழுக்காட்டு இந்தியர் கள்தான் இங்கு உள்ளனர்.

குடிபெயர்தல் என்பது அந்தக் காலத் தில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. 2000ஆம் ஆண்டுகளில் பெருமளவிலான இந்தியர் கள் சிங்கப்பூரில் குடிபெயர்ந்தனர். அவர் கள் காலப்போக்கில் சிங்கப்பூர் குடிமக்க ளாகவும் நிரந்தரவாசிகளாகவும் மாறினர். நமது மூதாதயர்களைப்போல, அவர்களும் மேம்பட்ட வாழ்க்கைக்காக சிங்கப்பூருக்கு வந்து பின்னர் இந்நாட்டைத் தங்கள் வாழ் விடமாகத் தேர்வு செய்தனர்.

நீண்டகாலம் தங்குபவர்களாக இருந் தாலும் புதியவர்களாக இருந்தாலும், இங்கு வந்த இந்தியர்கள் ஏதாவது ஒரு வகையில் சிங்கப்பூரின் வெற்றிக்கும் வள மான கலாசார மரபுடைமைக்கும் பங்களித் துள்ளனர். தீவைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள பதா கைகளைப் பாருங்கள். அதில் ஒன்று செட்டி மலாக்கா இனத்தவர் அதாவது பெரனாக்கான் இந்தியர்கள் பற்றிய கண் காட்சி பற்றியதாக இருக்கும். மலாக்கா சுல்தான் அரசாட்சியின்போது தென் இந் தியாவிலிருந்து வந்த வர்த்தகர்களான அவர்கள், உள்ளூர் மலாய்க்காரர்களையும் சீனர்களையும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். மலாயாத் தீபகற்பத்தில் குடியேறிய அவர்கள் நாளடைவில் அவர்களுக்கென ஒரு தனித்துவமான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டனர். மலாக்கா சுல் தான் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு, அவர் களில் சிலர் சிங்கப்பூரில் அமைந்த புதிய குடியேற்றத்துக்கு இடமாறினர்.

அவர்களிலிருந்து உருவானதுதான் சிங்கப்பூர் செட்டி மலாக்கா சமூகம். சிங் கப்பூர் இந்திய சமூகத்தின் தனித்து வத்தைப் பிரதிபலிக்கும் பல உதாரணங் களில் இதுவும் ஒன்று. மேற்குறிப்பிட்ட இந்தியப் பிரிவினரைத் தவிர, பஞ்சாபியர்கள், மலையாளிகள், குஜராத்தியர் என மேலும் பலர் உள்ளனர்.

இந்திய கடைக்காரர்கள் தங்கள் வர்த் தகத்தை சிராங்கூன் ரோட்டில் நிறுவினர். அந்தப் பகுதி பின்னர் லிட்டில் இந்தியா ஆனது. இப்போது லிட்டில் இந்தியா சிங்கப் பூரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டின ரையும் கவர்ந்துள்ள உன்னதமான, தனித் துவம் பெற்ற பகுதியாக விளங்குகிறது. ஆக, இருநூறாவது ஆண்டு நிறைவு என்பது நமது வரலாற்றில் மிக முக்கிய மான திருப்புமுனை. மேலும் ஒரே மக்க ளாக நாம் கடந்து வந்த பயணத்தைக் குறிப்பதாக அமைகிறது. அந்தப் பயணத் தில் நாம் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் அனுசரித்து இன்றைய நிலைக்கு வந்தி ருக்கிறோம்.

தனித்துவமான சிங்கப்பூரருக்கு உரிய மரபணுவில், வெளிப்படையான மனப் பான்மை, பல கலாசாரம், சுய நம்பிக்கை யுடன் செயல்படும் நமது வலுவான உணர்வு ஆகியவை அங்கம் வகிக்கின் றன. வெளிப்படையான மனப்பான்மை நமது வெற்றிக்கும் வளப்பத்துக்கும் முக்கிய திறவுகோலாக அமைந்து வந்துள்ளது. சிங்கப்பூரை ராஃபிள்ஸ் தடையற்ற துறை முகமாக உருவாக்கியபோது, அதுதான் அக்காலத்தில் வெற்றிக்கு இட்டுச்சென்ற முக்கிய அம்சமாக விளங்கியது. அது வட்டார வர்த்தகத்தைத் தாண்டி சிங்கப்பூரை உலக வர்த்தகத்தின் பக்கம் அழைத்துச் சென்றது. அனைத்துலக வர்த்தகப் பாதைகளை சிங்கப்பூருக்கு அது திருப்பிவிட்டது. நமது வெற்றிக்கு தடையற்ற வர்த்தகம் முக்கிய அடித்தளமாக அமைந்து வந்திருக் கிறது. அதனால்தான் உலகமெங்கும் தன் னைப்பேணித்தனம் ஆக்கிரமித்துள்ள நிலையிலும் நாம் அதற்கு வலுவான ஆத ரவை அளிக்கிறோம்.

பல கலாசாரம் நமது சமூக உணர்வுக்கு முக்கிய அடிக்கல்லாக அமைந்துள்ளது. முன்பிருந்தது போலவும் இப்போது இருப் பது போலவும் இனி எப்போதும் மக்கள் தங்கள் கனவுகளை மெய்ப்பித்துக்கொள் ளவும், அமைதியாக, ஒற்றுமையாக வாழ வும், பல இனங்களை அனுசரித்து நடக்க வும், தங்களுக்கு விருப்பமான சமய நம் பிக்கையைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க வும் சிங்கப்பூர் இருப்பதைக் கட்டிக்காக்க வேண்டும்.

சுய உறுதி, இறையாண்மை ஆகியவற் றுக்காக நமது முன்னோடித் தலைமுறை யினரும் மெர்டேக்கா தலைமுறையின ரும் போராடி வந்துள்ளனர். நமது சொந்த பாதையை நிர்ணயித்துக் கொள்ளவும் நமது எதிர்காலம் என்ற புத்தகத்தை எழுதுபவர்களாவும் இருக்க அவர்கள் போராடினர். இவை கடுமையாக போராடிப் பெற்ற விலை மதிப்பற்ற உரிமைகள். வரலாற்றுக் குறிப்புகள் காட்டுவது போல, பெரிய நாடுகள் தங்களைவிட சிறிய நாடுகளுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முற்படும் மனப்போக்கைக் கொண்டிருக்கலாம். அதன் காரணமாகத்தான் நமது இறையாண்மையைப் பாதுகாக்க தற் காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. உள்ளூரிலும் அனைத்துலக ரீதியிலும் சட்டத்தை முன்வைத்து முன்னேறிச் செல்லும் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். நம்முடன் நட்புப் பாராட்டும் யாராக இருந்தாலும் அவர்களுடன் நாம் அணுக்கமான நண்பர்களாக இருப் போம். அதே சமயத்தில் எது நம்முடை யதோ அதை தற்காப்பதிலும் பாதுகாப் பதிலும் நாம் உறுதியுடன் இருப்போம். சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு என்பது நாம் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கும் நேரம். அது ‘சிங்கப்பூர்’ என்று இருந்த நம்மில் ‘சிங்கப்பூரர்’ என்ற வலுவான உணர்வை ஏற்படுத்தி ஒன்றிணைத்த பயணம்.