சிகரெட் புகை உலக நல்வாழ்வுக்குப் பகை

தொழிற்சாலைகளின் பெருக்கம், வாழ்விட சுற்றுச்சூழல், மக்களின் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்கெனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தூய்மை கெட்டுவிட்டது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியாவில் காட்டுத் தீ காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் சம்பவம் ஏறக்குறைய ஆண்டுதோறும் நிகழ் வது உண்டு.

இவையெல்லாம் போதாதென்று, சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகையிலைப் பொருட் களைப் பற்றவைத்து அந்தப் புகையை உள்ளே இழுத்து வெளியேவிடும் மானிடர்களும் உலகம் முழுவதும் பரவி வசிக்கிறார்கள். இவர்கள் வெளியே தள்ளும் புகை, காற் றைக் கெடுப்பதோடு, இத்தகைய நபர்களை மட்டுமின்றி சுற்றி இருப்போரின் உடல் நலனையும் உயிரினங்களையும் பாதிக்கிறது. இப்போதைய உலகில் வாழும் ஏறக்குறைய 8 பில்லியன் மக்களில் சுமார் 1.1 பில்லியன் பேர் புகையிலைப் புழங்கிகள். இவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் கீழ்மட்ட அல்லது நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட நாடு களைச் சேர்ந்தவர்கள்.

உலக சுகாதார நிறுவனம் கூறுவதைப் பார்க்கையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோரில் பாதிபேர் அதன் காரண மாகவே அகால மரணம் அடைகிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆண்டுதோறும் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைப் புகையாகவும் இதர வகையிலும் புகையிலை கொல்லுகிறது.

இவர்களில் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் புகைப்பிடித்து மாண்டுபோகிறார்கள். புகையிலைக் காற்றை இழுத்து வெளியே விடும் நபர்களால் பாதிக்கப்படும் சுற்றுப்புறத் தில் வாழும் சுமார் 890,000 மக்களும் ஆண்டுதோறும் மரணம் அடைகிறார்கள்.

இவர்கள் சுத்தமான சூழ்நிலையில் வாழ சட்டபூர்வ உரிமையைப் பெற்றுள்ளவர்கள். சமையலறையில் புகை படிவதைப் போல புகையிலைப் புகையை நிரந்தரமாகச் சுவாசிப் போருக்கு அவர்களின் உடலில் நுரையீரலில் புகையிலைப் புகை மண்டுகிறது. இதனால் சுவாச மண்டலத்துக்குக் கேடு ஏற்பட்டு, நுரையீரலின் செயல் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் ஏற்படுகின்றன.

புகையிலையும் அதன் புகையும் குணப்படுத் தவே முடியாத புற்றுநோயை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

புகையிலைப் புழங்கிகள் காரணமாக அவர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்றவர் களுக்கும் நாட்டின் பொருளியலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கணிசமானவை என்று ஒவ்வொரு நாடும் குறிப்பிடுகின்றன. இதனை உணர்ந்து சிங்கப்பூர் ஏற்கெனவே சிகரெட், புகையிலைப் பொருட்களுக்கு எதி ராகக் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்தி வருகிறது. அந்த நடவடிக்கைகளை 2019 முதல் சிங்கப்பூர் கடுமையாக்கியுள்ளது.

ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் இனிமேல் யாரும் பொது இடங்களில் கண்டபடி புகை யிலைப் புகையை வெளியே தள்ளமுடியாது. அதேபோல 19 வயதுக்குக் குறைந்தவர்கள் புகையிலைப் பொருட்களைத் தொடக்கூட தடைசெய்யப்பட்டு இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 21 வயது நிரம்பியவர்தான் புகையிலைப் பொருளைத் தொடமுடியும். சட்டத்தை மீறும் நிறுவனங் களுக்கும் இனி முன்பைவிட கடும் தண்டனை விதிக்கப்படும்.

இதேபோல் உலக நாடுகள், புகையிலைப் பொருள் பயனீட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலும் தடுப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கவேண்டும். சிகரெட் விளம்பரங் களுக்குத் தடை விதிக்கவேண்டும். பெரும் நிகழ்ச்சிகளுக்கு சிகரெட் நிறுவ னங்கள் பொறுப்பாதரவு அளிப்பதைத் தடுக்க வேண்டும்.

பெற்றோர்கள், சக இளையர்கள், பள்ளிக் கூடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சமூகமும் சேர்ந்து புகையிலை பக்கம் திரும் பாமல் இளையரைக் காக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தனிப் பட்டவர்கள் தங்களுடைய நலனில் மட்டு மின்றி மற்றவர்கள் நலனிலும் நாட்டின், வீட்டின் நலனிலும் அக்கறையுடன் நடந்து கொள்ளவேண்டும். இப்படி செயல்பட்டால் புகையிலை பாதிப்பு இல்லாத உலகைச் சாதிக் கலாம்.

இந்த இலக்கை நிறைவேற்றுவதில், சிங் கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகளும் இந்த ஆண்டில் பக்கத்து நாடான மலேசியா நடை முறைப்படுத்தி உள்ள சட்டத்திட்டங்களும் உலக முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.

Loading...
Load next