பட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்

வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) 2019 தொடர்பான நான்கு நாள் விவாதத்தை இதுவரை முடித்துள்ளோம். 
நமது வருடாந்திர தேசிய பட்ஜெட் நாட்டின் வருமானம் மற்றும் செலவுகள் அல்லது சலுகைகள் பற்றியது மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.  
நிதி ஒதுக்கீடு வழி, நமது தேசிய பட்ஜெட், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர் களின் எதிர்காலத்துக்குத் தேவையான உத்திபூர்வ நிதித் திட்டங்களுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு பட்ஜெட்டும் முன்னைய பட்ஜெட்டின் வளர்ச்சியை முன்னெடுத்
துச் செல்கிறது. 
ஒரு வலுவான, ஒன்றுபட்ட சிங்கப் பூரை உருவாக்கும் திட்டம்தான் பட்ஜெட் 2019. அதில் வலுவான தற்காப்பு ஆற் றல்கள், நமது பொருளியலை உருமாற்று தல், நல்ல வேலைகளில் அமர்வதற்கான ஆற்றல்களை நமது ஊழியர்கள் பெறுவ தற்கு உதவுதல், ஒரு பரிவுள்ள, அனைவ ரையும் உள்ளடக்கும் சமூகத்தை உரு வாக்க ஒருவர் மற்றவருடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை பட்ஜெட் திட் டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
பட்ஜெட் 2019ல் உள்ள இரு சிறப்பு அம்சங்களை நான் இன்று சுட்டிக்காட்ட இருக்கிறேன். 
* மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்
* இருநூற்றாண்டு நிறைவு போனஸ்  

மெர்டேக்கா தலைமுறைத் 
தொகுப்புத் திட்டம்

60 முதல் 69 வயது வரையுள்ள சிங்கப்பூரர்கள் மெர்டேக்கா தலைமுறை யினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கானதுதான் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்.
அவர்கள் சுதந்திர சிங்கப்பூரின் வளர்ச்சியில் பெரிதும் பங்களித்தவர்
கள். அவர்கள் முதற்கட்ட தேசிய சேவை  கடமையாற்றினர், நமது பொதுச் சேவை களை வளர்த்தவர்கள், பொருளியலை நவீனமயப்படுத்தியவர்கள். 
1970களில் பிரிட்டிஷ் துருப்புகள் சிங்கப்பூரைவிட்டு வெளியேறியது, கம் யூனிச மிரட்டல், 2001ஆம் ஆண்டு செப் டம்பர் 11ஆம் தேதிக்குப் பிந்திய விளை வுகள் போன்ற சிரமமான காலங்களை நம்முடன் கடந்து வந்தவர்கள். 
இங்கு கிட்டத்தட்ட 500,000 மெர் டேக்கா தலைமுறையினர் உள்ளனர். அவர்களில் பலர் ஒய்வு பெற்றுவிட்டனர். பாதிப் பேர் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 
முதுமைக் காலத்தில் அவர்கள் நினைவில் இருப்பது சுகாதாரப் பராமரிப் புச் செலவுகள்தான். அதே நேரத்தில், அவர்கள் ஆரோக்கியத்துடனும்  துடிப்பு டனும் இருப்பதையே காணவே நாங்கள் விரும்புகிறோம். 
இந்த இரு அம்சங்கள் மூலம் அவர் களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மெர் டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுகா தாரப் பராமரிப்புப் பலன்கள்:

* 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டுக்கும் $200 மெடிசேவ் பணம் நிரப்புதல்.
* ‘சாஸ்’ பொது மருந்தகங்கள் மற்றும் பல் மருந்தகங்களில் சிறப்புக் கட்டணக் கழிவுகள். அவை ‘சாஸ்’ நீல நிற அட் டைக்கான கட்டணக் கழிவுகளைவிட அதிகம்.
* பலதுறை மருந்தகங்களிலும் பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங் களிலும் கட்டணக் கழிவுகள் பட்டியலில் 25% கூடுதல் கழிவுகள்
* ‘மெடி‌ஷீல்டு லைஃப்’ சந்தாக் கழிவுகள்
* ‘கேர்‌ஷீல்டு லைஃப்’ திட்டத்தில் சேர் வதற்கான $1,500 பங்கேற்புச் சலுகை. முன்னதாக அறிவிக்கப்பட்ட $2,500 சலுகையுடன் சேர்த்தால், மெர்டேக்கா தலைமுறையினர் ‘கேர்‌ஷீல்டு லைஃப்’ திட்டத்தில் சேர்ந்தால் மொத்தம் $4,000 கிடைக்கும்.