தரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு

மனித வளத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர், தன் மக்கள் கல்வி யிலும் ஆற்றல், தேர்ச்சிகளிலும் பின் தங்கி விடாமல் காலத்துக்கு ஏற்ப எப்போதுமே மேம் பட்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்புடைய கல்வி முறையைத் திறம்பட நடப்புக் குக் கொண்டுவந்து அதை அப்போதைக்கு அப்போது மேம்படுத்தி வருகிறது. 
பொருளியலுக்கு, வாழ்க்கைக்குத் தேவை யான எல்லா பாடங்களிலும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாணவர்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை அந்த முறை அவசியமாக்குகிறது. 
ஆனால் அதற்கு ஈடுகொடுக்க முடியாத பிள்ளைகள் படிப்புக்கும் நமக்கும் ஒத்துவராது என்ற எண்ணத்தில்  பள்ளிப்படிப்பைப் பாதி யிலேயே கைவிடும் போக்கு முன்பு குறிப் பிடத்தக்க அளவுக்கு இருந்ததை அடுத்து யாரும் ஒதுங்கிவிடாமல் எல்லாரும் அவரவர் திறமைக்கு ஏற்ப கல்வி கற்றாகவேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் தரம் பிரிப்பு முறை அமலானது. 
இந்த ஏற்பாடு விரும்பிய பலனைத் தந்தது.  படிப்பைப் பாதியில் விடும் மாணவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. இருந்தாலும் இந்த  ஏற்பாடு காரணமாக விரும்பப்படாத சில தொடர் விளைவுகளும் ஏற்பட்டுவிட்டன. 
படிப்பில் பலவீனமாக இருந்த மாணவர்கள், கடும் முயற்சி தேவைப்படாத பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்ற ஒரு சூழலை தரம் பிரிப்பு முறை ஏற்படுத்தித் தந்தது. 
இதன் மூலம் அத்தகைய மாணவர்களுக் குத் தாழ்வு மனப்பான்மை எண்ணம் ஏற்பட்டு அதன் காரணமாக அவர்களுடைய அறிவு மேம்பாடும் சமூக அடையாளமும் பாதிக்கப் படும் நிலை இருந்தது. மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், அந்த ஏற்பாட்டின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களைவிட அதிகம் என்று சிலர் வாதிட்டார்கள். 
அந்த ஏற்பாட்டின் மூலம் ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த மேம்பாடும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு தொடக்கப்பள்ளிகளில் கல்வி அமைச்சு முன்பு நான்காண்டு காலத் தில் தரம் பிரிப்பு நடவடிக்கையைக் கட்டம் கட்டமாக அகற்றியது.
பல பத்தாண்டுகள் காலமாக நடப்பில் இருந்து வந்துள்ள இந்த முறைப்படி, மாண வர்கள் உயர்நிலைப்பள்ளிகளில் தங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் விரைவுநிலை, வழக்கநிலை, (ஏட்டுக் கல்வி) வழக்கநிலை (தொழில்நுட்பம்) என்று தரம் பிரிக்கப்படுகின்றனர்.  
தொடக்கப்பள்ளியைத் தொடர்ந்து உயர் நிலைப்பள்ளிகளிலும் தரம் பிரிப்பு அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. 
உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களைத் தரம் பிரிப்பதற்குப் பதிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக பாட அடிப்படை யில் மாணவர்களை வகைப்படுத்தும் நடை முறை இடம்பெற இருப்பதாக நாடாளுமன்றத் தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 
புதிய முறையின்படி மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பாடங்களைத் தங்கள் திறமைக்கு ஏற்ப கற்பார்கள்.
ஒவ்வொரு மாணவரிடத்திலும் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு என்பதையும் ஒவ்வொரு மாணவரின் முழு ஆற்றலும் வெளிப்பட உதவி தேவை என்பதையும் இந்த ஏற்பாடு அங்கீகரிக்கிறது.
பாட அடிப்படையில் இடம்பெறக்கூடிய வகைப்பாடு, தரம் பிரிப்பு தொடர்பிலான களங்கத்தைப் போக்கிவிடும். 
இப்படிச் செய்வதன் மூலம், ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள பல வகை ஆற்றல் களில் இந்த ஏற்பாடு அதிகமாக ஒருமித்த கவனம் செலுத்தும் என்று நம்பலாம். 
புதிய ஏற்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் விளக்கியபோது, தனித்தனி யான மூன்று ஓடைகளில் மீன்களை நீந்த விடும் சூழல் இனி இராது என்றும் பெரிய, பரந்த ஆற்றில் ஒவ்வொரு மீனும் தனது ஆற்றலுக்கு ஏற்ப சொந்த வழியில் நீந்தி  வாழும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
உயர்நிலைப்பள்ளிகளில் நடப்புக்கு வரும் இந்தப் புதிய ஏற்பாடு, மாணவர் ஒவ்வொரு வரும் இனி தாங்கள் குறைந்த தரப் பரிவைச் சேர்ந்தவர்கள் என்ற களங்கம், மனச்சோர்வு இல்லாமல் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப படித்து, சிக்கலான உலகத்தைச் சமாளிக்க ஆயத்த மாவதற்கு உதவக்கூடிய சிறந்த வழியாக இருக்கும் என்று நம்பலாம்.